எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.14 பாரதீய ஜனதா ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வாதி கார வடகொரியா நாடு அல்ல என்று  பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அகில இந்திய  காங் கிரசு செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா பதில் தெரிவித்துள்ளார்!

கடந்த செப்டம்பர்  8, 9 ஆகிய தேதிகளில் பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. அதில் பேசிய அமித்ஷா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்கள வைத் தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாகநடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும் அடுத்த 50 ஆண்டிற்கு பாஜக-வின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அமித்ஷாவின்பேச்சுபர பரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள்அமித்ஷாகன வுலகில் வாழ்கிறார் என்று நக்கல் செய்தன. இந்த நிலை யில்செய்தியாளர்களிடம்பேசிய  காங்கிரசு செய்தித் தொடர் பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா அமித் ஷாவுக்கு காட்டமாக பதில் அளித்தார். ஜனநாயகம் அற்ற முறையில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய நினைக்கும் பாஜக-விற்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் வடகொரியா போன்று ஒரே ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வாதிகார நாடு இல்லை'' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், வடகொரியாவைப் போல் இந்தியாவைசர்வாதிகாரஆட் சிக்குள் கொண்டுவர  நினைக் கும் பாஜகவின் கனவு பலிக் காது. இந்திய மக்கள் விழிப் புணர்வு கொண்ட மக்கள். விரைவில் இந்திய மக்கள் பாஜக ஆட்சியை தூக்கியெறிவார்கள். வரும் 2019- ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரசு அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner