எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

>> ஜனநாயகமும், மதச் சார்பின்மையும் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருபவை. - இல.கணேசன் எம்பி., பி.ஜே.பி.

(ராமராஜ்ஜியம் அமைப்போம், ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று முழங்குவதும் அந்த மதச்சார்பின்மையைச் சேர்ந்தது என்பதுதான் பி.ஜே.பி. அகராதியோ!)

>> தியாகத்தின் அடையாளமாகக் காவி கருதப்படுகிறது. - பொன்.இராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர்.

(கொலைக் குற்றத்திற்காக நீதிமன்ற குற்றக் கூண்டில் ஏறி, சிறையும் கண்ட சங்கராச்சாரி முதல், ‘செக்ஸ்' புகழ் நித்தியானந்தாவரை அணிவது காவிதான்)

>> ஓமன் சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு.

(வெளிநாடு சென்றாலும் இந்துக் கோவில்தானா? ஏன் அங்கே தர்காக்கள் இல்லையா?).

>> வேலை வாய்ப்பின்மைதான் நாட்டின் முக்கியப் பிரச்சினை. - ராகுல் காந்தி, அ.இ.காங்கிரசு தலைவர்.

(வேலையற்றவர்கள் இந்த ஆட்சியை வெளியேற்றும் வேலையைச் செய்வார்கள்).

>> ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளிலும் போட்டியிடத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.

(இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஒரு தொகுதியிலிருந்து  ராஜினாமா; அதன்பிறகு இடைத்தேர்தல்;

யார் அப்பன் வீட்டுப் பணம்?)

>> சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய சாட்சிகளைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சி.பி.அய்.யிடம் மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி.

(அதைவிட நீதிபதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களை தீ வைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் 21 பேர்களும் குற்றவாளிகள் அல்லர் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்த நீதிபதி பி.ஜே.சேத்னாவுக்கு பதவி உயர்வு, ஓய்வுக்குப் பிறகு முசுலிம்களைக் கணக்கெடுக்கும் ஓர் ஆணையத்திற்குத் தலைவராக்கப்பட்டாரே (2010)).

>> நாடாளுமன்றத் தேர்தலை நடத்திட ராஜபக்சே கோரிக்கை.

(இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைபற்றிய (ஜெனோசைடு) விசாரணை என்னாயிற்று என்ற கோரிக்கை என்னாயிற்றாம்?).

>> சங் பரிவார் அமைப்பினருடன் இராணுவத்தை ஒப்பிட்டு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசவில்லையாம். - ஆர்.எஸ்.எஸ். வியாக்கியானம்.

(எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுதான்!).

>> கட்சி அறிவிப்பில் கமலை முந்த ரஜினி ஆயத்தம்.

(சினிமா ரிலீசில்தான் இந்தப் போட்டி என்றால், இதில் கூடவா?)

>> இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட ஏராளமான கடன் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பகோடா தொழிலுக்கும் கடன் வழங்கப்படும்; அந்தக் கருத்தில்தான் பிரதமர் சொல்லியுள்ளார். - இல.கணேசன் எம்.பி., பி.ஜே.பி.

(பெரும்பாலும் பாஷ்யகர்த்தாக்கள் தான் ஆபத்தானவர்கள்!)



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner