எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருநெல்வேலி, டிச.7  நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு வந்த ஆளுநர் புரோஹித்,  15க்கும் மேற்பட்ட  துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பேருந்து நிலையத்தில் துய்மை பணியிலும் ஈடுபட்டார்.

நெல்லை மனோன்மணியம் சுந் தரனார் பல்கலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, 25ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆளுநர் புரோஹித் பங்கேற்று, 752 மாணவ - மாணவியருக்கு, பட்டங்களை நேரடி யாக வழங்கினார். முன்னதாக, பல் கலை வளாகத்தில், 1 மெகாவாட் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, ஆளுநர் அடிக்கல் நாட்டினார்.

விழா முடிந்து, 2:00 மணிக்கு புறப்பட்ட ஆளுநர் புரோஹித், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத் திற்கு சென்றார். அங்கு, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடந்த துப்புரவு பணிகளை பார்வையிட்டார். ஆளுநர் வருகையை முன் னிட்டு, நடைபாதை கடைகள், ஆக்கி ரமிப்புகள் அகற்றப்பட்டு, பேருந்து நிலையம் சுத்தமாக இருந்தது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆளு நரும், கைகளில் ரப்பர் உறைகளை மாட்டி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பின், அவரே குப்பையை கையால் எடுத்து போட்டார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி உள்ளிட்ட அதிகாரிகளும் குப்பை அள்ளினர். அங்கிருந்த மாநகராட்சி ஆணையர் நாராயணன் நாயரிடம், 'குப்பையை போட மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு தனித்தனியாக கூடைகள் வைத்துக் கொள்ள கூடாதா... ஒரு அதிகாரிக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் எப்படி சாதாரண மக்களுக்கு தெரிவிப்பீர்கள்...' என, ஆளுநர் கேள்வி எழுப்பினார். பின், தூய்மை பாரத இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். பேருந்து நிறுத்தத்தில் நின்ற ஒரு மாணவியிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து, சத்தமாக படிக்க சொன்னார். தொடர்ந்து, தெற்கு பஜார் பகுதியில், தூய்மைப் பணி விழிப்புணர்வு மேற்கொண்டார். பின், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். சுற்றுலா மாளிகையில், 2:00 மணியில் இருந்து, பல்வேறு துறை அதிகாரிகள், பைல்களுடன் காத்திருத் தனர். இதில், சுகாதாரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட முக்கிய துறை அதிகாரிகளுடன், ஆளுநர் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.

மாலையில் மக்கள் பிரதி நிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர் களை  சந்தித்து, குறை களை கேட்ட றிந்தார். இரவு, கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.



இந்நாள்... இந்நாள்...


1942 - 'லிபரேட்டர்' ஆங்கில நாளேடு துவக்கம்

 



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner