எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றிய கொள்கை வீரர் தோழர் பாரூக் அவர்களைத் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான படுகொலை! இதற்குக் காரணமான உண்மையான கொலையாளிகள், திட்ட மிடப்பட்ட இக்கொலையில் பங்கேற்றவர்கள், தூண்டிய சக்திகள் அனைவரையும் கோவை போலீஸ் அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை வழங்கிடும் வகையில் புலன் விசாரணையும் மற்ற நடவடிக்கைகளும் அமைந்திடல் வேண்டும்.

மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் - தடுத்திடல் வேண்டும்.

மறைந்த அந்தத் தோழருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்!

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அவர் சார்ந்த அமைப்புக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி. வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
18-3-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner