எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர், மார்ச் 13 திருவாரூர் மாவட் டம், திருவாரூர் ஒன்றியம் வடகுடி திராவிடர் கழக கிளைக் கலந்துரை யாடல் கூட்டம் 7.3.2019 அன்று காலை 10.30 மணி அளவில் வடக்குடி சமு தாயக் கூடத்தில் நடைபெற்றது. திரு வாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் அவர்கள் தலைமை ஏற்று உரையாற் றினார்.

வடகுடி

மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் இரா.கோபால், திரா விட மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் ஆகி யோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள். தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் வீரையன், மாவட்ட விவசாய அணி தலைவர் ரெத்தினசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் இராசேந்திரன், மாவட்ட ப.க தலைவர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் சாம் பசிவம், மாவட்ட மகளிரணி தலைவர் சரஸ்வதி, பெரியார் பெருந் தொண்டர் கோவிந்த சாமி, சிவானந்தம், மனோஜ், ஒன்றிய மகளிரணி செயலாளர் சைனம்பு, வடகுடி செல்வராஜ், ஆறுமுகம், குண சேகரன், ரெத்தினம், தனலட்சுமி, வள்ளி யம்மை, அஞ்சான், அருமைநாதன்,  பொன்னம்மாள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கருத்துரையாற்றினார்கள். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் அவர்களின் உழைப்பு, கழகத் தோழர்கள் செய்யவேண்டிய பணிகள், நாடாளு மன்றத் தேர்தலில் நமது நிலைப்பாடுகள் குறித்தும் விளக்க மாக தனது உரையில் குறிப்பிட்டார். இறுதியாக கிளைக்கழக தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன புதிய பொறுப்பாளர்கள் அறி விக்கப்பட்டார்கள்.

திருவாதுறை மங்கலம்

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் திருவாதுறை மங்கலம் கிளைக் கலந்துரையாடல் கூட்டம் 7.3.2019 அன்று பகல் 12.30 மணியளவில் அம்பேத்கர் இல்லத்தில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் அவர்கள் தலைமையுரை யாற்றினார். மாநில விவசாய தொழி லாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள். மாவட்டத் துணைச் செயலாளர் வீரை யன், மாவட்ட விவசாய அணி தலை வர் ரெத்தினசாமி, மாவட்ட ப.க தலை வர் சிவக்குமார், மாவட்ட மகளிரணி தலைவர் சரஸ்வதி, மண்டல மகளிரணி செயலாளர் மகேஸ்வரி, பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி, ஒன் றிய விவசாய அணி செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சாம்பசிவம், ஒன் றிய மகளிரணி செயலாளர் சைனம்பு சிவானந்தம், மனோஜ், பக்கிரிசாமி,  ஞானசேகரன், திராவிடமணி, இராமை யன், முருகையன், கிருஷ்ணன், அம் மாக்கண்ணு, அபூர்வம், பார்வதி, பாப்பாத்தி, அம்சவள்ளி, கொரடாச்சேரி ஒன்றிய ப.க. தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர் கள் உரையாற்றினார்கள். இறுதியாக கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் சிறப்புரையாற்றினார். இறுதி யாக ஞானசேகரன் நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளர்கள்

திருவாதுறை மங்கலம் கிளை திராவிடர் கழகம்

தலைவர்: தை.ஞானசேகரன், செய லாளர்: க.முருகையன்,  துணைச் செயலாளர்: தை.இராமையன்

தி.க மகளிரணி

தலைவர்: ஞா.இந்திராணி, செய லாளர்: தி.அம்மாக்கண்ணு

தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: வடகுடி பெரியார் பெருந்தொண்டர் பொன்னு சாமி அவர்களின் மறைவிற்கு இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

2) அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வடகுடி திராவிடர் கழக பொறுப்பா ளர்களின் ஒத்துழைப்போடு கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் வடகுடியில் கழகப் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

3) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மீது கொலை வெறியை தூண்டும் வகையில் செய்தியை வெளியிட்டு வன்முறையை தூண்டும் பார்ப் பன தினமலர் நிர்வாகத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. வன்முறையை தூண்டும் தினமலர் பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

4) மத்திய (பி.ஜே.பி) பா.ஜ.க. பாசிச மோடி ஆட்சியையும் அவர் களுக்கு துணை போகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் நடைபெற வுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழர் தலைவரின் கட்டளைப்படி திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் ஒருங் கிணைந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறசெய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

5) வடகுடி கிளை கழகத்திற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகி றார்கள். தலைவர் பொ.செல்வராஜ், செயலாளர் கா.குணசேகரன், துணைச் செயலாளர் பெ.ஆறுமுகம், திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் செ.வள்ளி யம்மை, செயலாளர் சொ.தனலட்சுமி ஆகியோர் அறிவிக்கப்படுகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner