எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை

இராணிப்பேட்டை, பிப். 22 16.2.2019 அன்று மாலை இராணிப்பேட்டை தனியார் விடுதியில் பெல் நிறுவன ஊழியர்களின் அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. வட்டத்தின்தலைவர் வே.இந்தி ரன் தலைமை வகித்தார். பெ.ஜெயக்கொடி வரவேற்புரையாற்றி னார். ஆலோசகர்கள் கோ.இளங் கீரன், தி.க.சின்னதுரை, கு.விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கவுரவத் தலைவர் பொன்.சேகர் துவக்க உரையாற்றினார். அ.கிருபக விக்னேஷ் நன்றியுரையாற்றினார்.

விழாவில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர்அ.அருள்மொழி இந்நிகழ்ச்சி யில்வழக்குரைஞர்பட்டியலில் பழங் குடியினரும், பிற்படுத்தப்பட்ட சமூ கத்தினரும் சரிபாதியாக கூடியிருப் பது பாராட்டத்தக்கது மட்டுமல்ல நாம் சரியான பாதையில் பயணிக்கத் துவங்கியிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நம் பிள்ளைகள் நம்முடைய நிலையை உணர்ந்து செயல்படத் துவங்கியிருக்கிறார்கள். இது நமக்கெல்லாம் மிகுந்த நம்பிக் கையை அளிக்கிறது. நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்கள் வரலாற்றை மறப்ப வர்களால் வரலாறு படைக்க முடி யாது என்னும் அம்பேத்கரின் கூற் றையும், அடங்கி வாழ்வது அவ மானம், போராடி வாழ்வது தன் மானம் என்னும் பெரியாரின் கூற் றையும் மிகச்சரியாக அழைப்பிதழில் பதிவிட்டிருக்கிறார்கள். இயல்பாக நடைபெற வேண்டிய நிகழ்ச்சியை மிக எழுச்சியாக சிறப்பு அரங்கத்தில் நடைபெறுவதற்கு வழிவகை செய்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெண் இனத்தின் பெருந்தகைகள் அம்பேத்கர் - பெரியார் என்னும் தலைப் பில் உரையாற்ற என்னைப் பணித் திருக்கிறார்கள். பெண் இனத்தின் உரிமை மீட்புக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அம் பேத்கர் & பெரியார் போன்றவர்களின் முன்னெடுப்புகளையும் அவர்களின் தொடர் போராட்டங்களையும் பட்டி யலிட்டார். முறைப்படி அனுமதி பெற்றிருந்தும் பெல் நிறுவன மனமகிழ் மன்றத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு தடைவிதித்த பெல் நிர்வாகத்தையும், ஆதிக்க சக்திகளை யும் வன்மையாகக் கண்டித்தார்.

இந்நிகழ்வில் லோகநாதன், கோவிந்தசாமி, சிவகுமார், பாண்டி யன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் உரையாற்றினார்கள். பாலசுப்ரமணி யன், கோவிந்தசாமி, நீலகண்டன், பூபாலன், மேகநாதன், வீரபாண்டியன் உள்ளிட்ட வட்டத்தின் முன் னோடிகள் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர். திராவிடர் கழக வேலூர் மண்டல நிர்வாகிகள் சடகோபன், இளங்கோவன், சிவகுமார் தேன் மொழி உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner