எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலந்துரையாடலில் தீர்மானம்

அரியலூர், பிப்.21 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.2.2019 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க,மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன்,மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி தொடக் கவுரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டியதன் அவசியம், நிதி வசூல் தேவைபற்றி சிறப்புரை யாற்றினார்.

கழக பொறுப்பாளர்கள்

கே.பி.கலியமூர்த்தி, முத்தமிழ்செல்வன், மு.மருதமுத்து, இரத்தின.இராமச்சந்திரன், தங்க.சிவமூர்த்தி, ந.செல்லமுத்து, வெ.இளவரசன், பொன்.செந்தில்குமார், சி.சிவக்கொழுந்து, இரா.இராம தாஸ், மு.கோபாலகிருட்டிணன், இரா.திலீபன், இர.இராமச்சந்திரன், சு.சேகர், மி.வெங்கடாசலம், மா.கருணாநிதி, மா.அசோக், ரகுபதி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிதியினை அறிவித்து, வசூல் செய்து கொடுக்கவும் உறுதி கூறினார்கள்.

தீர்மானங்கள்

பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு சிறப்பான வகையில் விளம்பரம் செய்வ தெனவும், நிதி வசூல் செய்து தரவும்  குடும்பம் குடும்பமாக மாநாட் டில் பங்கேற்பதெனவும், 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பில் பங்கேற்கவும் முடிவு செய்யப்படுகிறது.

இளைஞர்களை திரட்டி கடைவீதியில் துண்டறிக்கை கொடுத்து மாநாட்டிற்கு நிதி திரட்ட தீர்மானிக்கப்படுகிறது.

தஞ்சை சமூகநீதி மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க கடலூர் மாவட்ட கழகம் தீர்மானம்

கடலூர், பிப்.21 கடலூர் மாவட்ட திராவிடர் கழக செயல்வீரர்கள் கூட்டம் 17.2.2019 அன்று மாலை 5 மணியளவில் வடகுத்து & அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.

மண்டல செயலாளர் தண்டபாணி, மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் தாமோதரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முனியம்மாள், ஒன்றிய கழக தலைவர் கோ.இந்திரஜித், ஒன்றிய கழக செயலாளர் இரா.குண சேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராம னாதன், இந்திர நகர் கிளைக் கழகத் தலைவர் நா.கனகராசு, செயலாளர் இரா.கண்ணன், நெய்வேலி நகர கழக தலைவர் பாஸ்கர், புவனகிரி பழனியாண்டி, கம்மாபுரம் ஒன்றிய தலைவர் பாவேந்தர் விரும்பி, விசயா பாவேந்தர் விரும்பி, கலைச்செல்வி, கடலூர் மாதவன், கூத்தப்பாக்கம் சு.நாராயணசாமி, ஆசிரியர் பரமேசுவரன் ஆகி யோர் கருத்துரையாற்றினர்.

பிப்ரவரி 23, 24இல் தஞ்சையில் நடக்க உள்ள திராவிடர் கழக மாநில மாநாடு & பேரணி, சமூகநீதி மாநாடு சிறக்க பெருந்திரளாக தோழர்கள் குடும்பத்தோடு பங்கேற்பது எனவும் கிளைக்கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்துவது எனவும்.

மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நூலகர் இரா.கண்ணன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner