எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்மாபேட்டை

22.1.2019 அன்று மாலை 5.30 மணிக்கு சேலம் அம்மா பேட்டை காந்தி மைதானத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 86ஆவது பிறந்தநாள் தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் கே.ஜவகர் தலைமையில் மாநகர துணை செயலாளர் கே.ராசு வரவேற் புரைக்குப் பின் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வனின் பரப்புரை வீச்சு நடைபெற்றது.

தமிழர்களின் நிலை பண் பாடு எப்படி சீரழிக்கப்பட்டது. 10% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அனல் பறக்க பேசினார். இந்நிகழ்ச் சியில் பழனி.புள்ளையண்ணன் அறக்கட்டளை உறுப்பினர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.

வித்யாநகர்

22.1.2019 அன்று இரவு 8 மணி அளவில் பல்லவன் சாலை வித்யாநகர் சேலம் 3இல் இரண்டாவது கூட்டம் மாநகர் துணைத் தலைவர் கே.ராசு தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மத் திய அரசின் 10% இடஒதுக்கீட் டின் சீர்கேட்டைப் பற்றியும், பகுத்தறிவுக் கருத்துக்களையும் எடுத்துக் கூறினார்.

இரு நிகழ்வுகளிலும் மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், அமைப்பாளர் இராவணபூபதி, அம்மாபேட்டை மொட்டை யன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.

சேலம் தர்மநகர்

23.1.2019 அன்று முதல் நிகழ்ச்சி சேலம் ஜங்ஷன் தர்ம நகரில் மாலை 5.30 மணி அளவில் துணைத் தலைவர்  பரமசிவம் வரவேற்க பேங்க் ராசு தலைமையில் தெரு முனைப் பரப்புரை நடை பெற்றது. இந்நிகழ்வில் இந்து மதத்தால் நாம் அடையும் இழி வுகள் பற்றி மிகத் தெளிவாக அனைவருக்கும் புரிகின்ற முறையில் எடுத்துக் கூறினார். தஞ்சை பெரியார் செல்வன், மத்திய அரசின் 10% இடஒதுக் கீட்டை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறி யது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை உரு வாக்கியது. கூட்ட முடிவில் மாவட்ட அமைப்பாளர் இரா வண பூபதி நன்றி கூறினார்.

தென் அழகாபுரம்

23.1.2019 அன்று இரவு 7.30 மணிக்கு சேலம் தென் அழ காபுரம் காலனியில் சேலம் மாநகராட்சி (திமுக) எதிர்க் கட்சித் தலைவர் புவனேசுவரி முரளி தலைமையில் எழுச்சி யுடன் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பெண்கள் பெருமள வில் கலந்து கொண்டனர். தலைமை உரையாற்றிய புவ னேசுவரிமுரளி பெண்கள் பகுத்தறிவோடு வாழ்ந்தால் குடும்பம் நல்ல அறிவுள்ள குடும்பமாக இருக்கும். பகுத் தறிவோடு மட்டுமல்லாமல் தந்தை பெரியார் பேசிய பேச்சுக்களையும், பெரியாரின் புத்தகங்களையும் படித்தால் தான் நாமெல்லாம் மானத் தோடு வாழ முடியும் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். சிறப்புரையாற்றிய பெரியார் செல்வன் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், கருத்துக்க ளையும், அண்ணல் அம்பேத்கர் ஏற்றுக்கொண்டு செயல்பட்ட தையும், தந்தை பெரியாரின் தொண்டு, அம்பேத்கர் ஆற்றிய பணி, பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் செயல் பாடு முத்தமிழ் அறிஞர் கலை ஞரின் நலத்திட்டங்கள் தமி ழுக்கு ஆற்றிய தொண்டு உள் ளிட்ட கருத்துக்களையும், இந்து மதத்தால் விளைந்துள்ள தீமைகளை பற்றியும், சமஸ் கிருதத்தால் தமிழுக்கு ஏற்பட்ட இன்னல்களையும், சங்பரிவா ரின் எதிர்கால தீய திட்டங்க ளைப் பற்றியும், எழுச்சிமிகு உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி நன்றி கூற கூட்டம் முடிவ டைந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பெரியார் செல்வன் அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் முரளி. துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன் இறுதியாக நன்றி கூறினார்.

2 நாட்களில் 4 நிகழ்ச்சிக ளிலும், மாவட்டத் தலைவர் கே.ஜவகர், மாவட்ட செயலா ளர் அ.ச.இளவழகன், மாநில செயலாளர் கே.சுரேஷ், மாண வர் கழக மண்டல செயலாளர் சு.இ.தமிழர் தலைவர், மாவட் டத் துணைச் செயலாளர் வெற் றிச்செல்வன், மாநகரத் துணை செயலாளர் கே.இராசு, மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி, பேங்க் இராசு, துணைத் தலை வர் பழ.பரமசிவம் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner