எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட திருநாள் வாழ்த்துகள்.

பொங்கலோ பொங்கல்

கருப்பு என்பதால் எருமை மாடு இழிவா

பசு மாடு கோமாதாவா

மாட்டிலும் வர்ணபேதமா

என்ற முழக்கங்களுடன் காலை 10 மணிக்கு உரத்தநாடு பேருந்து நிலையும் பெரியார் படிப்பகத்தில் தொடங்கி அண்ணாசிலை கடை வீதி, வடக்கு வாணிபத் தெரு, காவக்காரத் தெரு, ராயர்  தெரு, யானைக் காரத் தெரு, கம் மாளத்தெரு வழியாக வடக்குத் தெருவில் நிறைவடைந்தது தெருவில் இருபுறமும் பொதுமக்கள் எருமை மாட்டு ஊர்வலத்தை வியந்து பார்த்தனர்.

ஊர்வலத்திற்கு தஞ்சை மாவட் டச் செயலாளர் அ.அருணகிரி தலை மையேற்றார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி விருது நகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, ஒன்றியத் தலைவர் மா.இராசப்பன், ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சுமணன், நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பெரியார்நேசன், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், திருவாரூர் மாவட்ட ப.க தலைவர் இரா.சிவக்குமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ரெ.சுப்ரமணியன், ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்ரமணியன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன். மு.சக்திவேல், கண்ணை கிழக்கு ஆரங்க.குமரவேல்,தெற்கு நத்தம் வே.தமிழ்செல்வன், ந.சிவசீலன்,

கீவளூர் சத்தியசீலன், நெடுவை விமல், பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெ.கவின், செ.சி.காவியன், ஜெ.ஜெ.காவியா, க.செ.கபிலன், க.செ.கவுசல்யா, செ.சி.கண்மணி , உள்ளிட்ட ஏராளமான கழகத்தோழர்களும். பொதுமக்களும், கலந்துகொண்டு ஊர்வலத்தை சிறப் பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner