எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேலஅனுப்பானடி, ஜன.13 மதுரை மேலஅனுப்பானடியில் 13.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக எழுச்சியுடன் நடைபெற்றது.

விழாவுக்கு பகுதி செயலாளர் பொ.பவுன்ராசு தலைமை வகித்தார். அனைவரையும் வரவேற்றார் பகுத்தறிவாளர் கழகம் சுப.முருகானந்தம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினார்கள்.

தொடக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, மாவட்ட துணைத்தலைவர் அ.வேல்முருகன் உரைக்குப்பின்பு கழக சொற்பொழி வாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார்.

பங்கேற்றோர்

மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா, செயலாளர் பேக்கரி கண்ணன், மகளிரணி ராணி கண்ணன், பகுதிச் செயலாளர்கள் ஆட்டோ செல்வம், சோ.சுப்பையா, முன்னாள் தலைவர் க.அழகர், பெரி.காளியப்பன், பாக்கியம், செல்ல கிருட்டிணன், நாகராசு, பழனி, மனோகரன், போட்டோ இராதா, முருகேசன், செல்வ சேகர், மாரிமுத்து, கிருஷ்ணமூர்த்தி, இராசேந்திரன், கணேசன், அய்யாச்சாமி மற்றும் தோழர்கள் பங்கேற்றார்கள். நிறைவாக வேல்துரை நன்றி கூறினார். விழாவை மேலஅனுப்பானடி திராவிடர் கழக பொறுப் பாளர்கள் சிறப்பு செய்து இருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner