எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு, ஜன.12 கடந்த 25.12.2018 அன்று காலை 10.30 மணிக்கு உரத்தநாடு பெரியார் மாளிகையில் தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி நினைவுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் கெ.கவிபாரதி வரவேற்று உரையாற்றி னார். பெரியார் பிஞ்சு நெடுவை வி.புதியவன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். நகர கழக தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், நகர கழக செயலாளர் ரெ.இரஞ்சித்குமார், நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், இளைஞரணிச் செயலாளர் பேபி ரெ. இரமேசு ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாணவர்கள் இரா. கவிநிலவு, அ.தமிழ்வேந்தன், அ.அறிவாசான், இ. திரிபுரசுந்தரி, ஒன்றிய கழக தலைவர் மா.இராசப்பன், செயலாளர் ஆ. இலக் குமணன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ச.சற்குணன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ந.காவியன், மாநில கலைத்துறைச் செயலாளர் ச. சித்தார்த்தன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா. இராம கிருட்டிணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்

படத்திறப்பு

பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தி படத்தினை திறந்து வைத்து மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி அவர்களும், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் நினைவுரையாற்றினார்கள்.

நூல் அறிமுகம்

தந்தை பெரியாரின் இறுதிப்பேருரை நூலினை அறிமுகம் செய்து திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தியின் தமிழர் தலைவர் வீரமணி ஓர் கண்ணோட்டம் நூலினை அறிமுகப்படுத்தி கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார் உரையாற்றினார்கள். நிறைவாக, இனிவரும் உலகம் என்ற தலைப்பில் மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே. மெ.மதிவதனி, கடவுளும் - மனிதனும் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினார்கள்.

சிறப்புரையாற்ற வருகை தந்த சொற் பொழிவாளர்களுக்கு தென்சென்னை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் த.விடுதலை தமிழ்முரசு, ஒன்றிய மாணவர் கழக தலைவர் இரவி.வீரமணி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள். அனைவருக்கும் சிங்கப்பூர் அறிவரசு மதிய உணவு அளித்து மகிழ்ந்தார்.

அறிவாசான் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆகியோர் உழைப்பினை, மாணவர் கழகத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை கேட்டு மகிழ்ந்த மாணவர்கள் யாவருக்கும் சரபோஜி கல்லூரி மாணவர் வீரச்செல்வம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner