எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை.ஜன.12 ஆவடி மாவட்டம் அயப்பாக் கத்திலுள்ள பள்ளிகளில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆவடி அயப்பாக்கத்தில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் 4.1.2019 அன்று பெரியார் ஆயிரம் வினாவிடைப் போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளை வடசென்னை மாவட்டம் பகுத்தறிவாளர் கழகம் முன்னெடுத்தது. போட்டியானது 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெரியார் 1000 புத்தகத்திலிருந்தும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெரியார் சிந்தனைச் சோலை புத்தகத்திலிருந்தும் நடத்தப்பட்டது. தேர்வு பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவு பெற்றது. இதற்காக முன்கூட்டியே அம்மாணவர்களுக்கு உரிய புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருந்தது. இப்புத்தகங்களை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கழகத் தோழர் அரசு அவர்கள் நன்கொடையாக வழங்கியிருந்தார். இரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் இப்போட்டியை செம்மையாக நடத்திட விரிவான ஏற்பாடுகளை ஆர்வத் துடன் செய்து கொடுத்திருந்தனர்.

இப்போட்டியை தொடங்கி வைத்த திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவர்களுக்கு பெரியார் பற்றிய ஒரு அறிமுகத்தை செய்துவைத்தார். அந்த அறி முகத்தில் அம்மாணவர்களையே உதாரண மாக்கி, திராவிடர் இயக்கத்தின் முக்கியமான கொள்கைகளைச் சொல்லி பெரியாரின் ஆளுமையை எளிமையாகவும், வலிமை யாகவும் புரியவைத்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலை வர்கள் மா.ஆறுமுகம், இரா.சண்முகநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் கோவி. கோபால், அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், துணைச்செயலாளர் பழனி மற்றும் வை.கலைச்செல்வன், இராமநாதன், தொல்பொருள் துறை ஆய்வறிஞர் தீபிகா, ஜெகதீஸ்வரன், ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், செயலாளர் இளவரசன் ஆகியோர் தேர்வின் ஒருங்கிணைப்புப் பணி களை மேற்கொண்டனர். தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட்டு உரியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner