எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம், ஜன.11 சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.1.2019 அன்று காலை 10.30 மணிக்கு அம்மாபேட்டை தமிழாசிரியர் மன்றத்தில் நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவகர் தலைமை வகித்தார். மண்டல கழகத் தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்பை விளக்கியும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். அறிவாசான் தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தந்தை பெரியார் தத்துவங்கள் தேவை என்பதையும், கழகத் தலைவருக்கு எதிராக களமிறங்கியவர்கள் கூட, தமிழர் தலைவர் அவர்களால் தான் இந்த மாற்றங்கள் என்று தெரிவித்திருப்பதை சுட்டிக் காட்டி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் பழநி.புள் ளையண்ணன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட கழக செயலாளர் அ.ச.இளவழ கன், மாவட்ட துணைத் தலைவர் பண்ருட்டி பரமசிவம், மாநகர தலைவர் பு.வடிவேலு, மாநகர செயலாளர் அரங்க.இளவரசன், மண் டல மாணவர் கழக செயலாளர் இ.தமிழர் தலைவர், ஈரோடு பா.வைரம், அம்மாபேட்டை தனபால், வங்கி & இராசு, பெரியார் பெருந் தொண்டர் வ.வேணுகோபால், ஆர்.கோவிந்த ராசு, ப.பூபாலன், கோ.சங்கரபாண்டியன், ஆர்.குமார், பி.இரஞ்சித், ஆர்.செகதீசு, பி.இரவிக்குமார், மு.கவுதமன், எஸ்.தங்கவேல், கே.ஆர்.இராசேசு, திருப்பூர் நகர கழக தலைவர் பாலகிருட்டிணன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கவிஞர் பா.திவ்வியபாரதி, சட்டக்கல்லூரி மாணவர் கழக தலைவர் கோ.விக்னேசுவரி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

புதிய பொறுப்பாளர்கள்

சேலம் மாவட்ட மாணவர் கழக தலைவர்: கோ.சங்க பாண்டியன், செயலாளர்: கவிஞர் பா.திவ்விய பாரதி

தீர்மானங்கள்

1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி பிப்ரவரி 7ஆம் தேதி நடை பெறவுள்ள மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கி சேலம் மாவட்ட 60 வட்டங்களிலும் 18.1.2019 அன்று தொடங்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

2) சேலம் சட்டக்கல்லூரி திராவிட மாண வர் கழகம் சார்பில் கவிஞர் நந்தலாலா அவர்களைக் கொண்டு தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? என்ற நூலினை வெளி யிட்டு விழா நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

3) மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், நூல் அறிமுக விழாவை சிறப்பாக நடத்துவதற்கு கீழ்க்கண்ட பிரச்சாரக்குழு நியமிக்கப்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர்கள்:

கே.ஜவகர் (மாவட்ட தலைவர்), அ.இள வரசன் (மாவட்ட செயலாளர்), இராவணபூபதி (மாவட்ட அமைப்பாளர்), பு.வடிவேல் (மாநகர தலைவர்), இள.இளவரசன் (மாநகர செயலாளர்), பரமசிவன் (மாவட்ட துணைத் தலைவர்)

பிரச்சாரக்குழு

தலைவர்: பா.வெற்றி, துணைத் தலைவர்: பா.திவ்வியபாரதி, செயலாளர்: இ.தமிழர் தலைவர், துணை செயலாளர்: பா.பூபாலன், பொருளாளர்: மு.கவுதமன், அமைப்பாளர்: வங்கி இராசு

வார்டு வாரியாக பொறுப்பேற்று கொண்டவர்கள்

1ஆவது வார்டு: பொறியாளர் செல்வராசு, பரமசிவம், 9 ஆவது வார்டு: பாண்டியன், பா.வைரம், 11 ஆவது வார்டு: சுஜாதா தமிழ்ச் செல்வம், 16 ஆவது வார்டு: இரமேசு, 23 ஆவது வார்டு: வங்கி இராசு, 37ஆவது வார்டு: மு.மொட்டையன், 39 ஆவது வார்டு: தனபால், பா.பூபாலன், 40 ஆவது வார்டு: தங்கவேல், இராசு, 54 ஆவது வார்டு: பு.வடி வேல், 56 ஆவது வார்டு: இராவண பூபதி, 57 ஆவது வார்டு: கே.ஜவகர், 59 ஆவது வார்டு: வ.வேணுகோபால், 60 ஆவது வார்டு: இள வரசன், கமலம்

அயோத்தியாப்பட்டினம்: ஜி.சங்கபாண்டி யன், மாதேஸ்வரன், கண்ணங்குறிச்சி: திருப் பூர் பாலு, திவ்வியபாரதி, கோ.விக்னேசுவரி, கல்பாரப்பட்டி: கோவிந்தராசு.

3) 18.1.2019 அன்று மாலை நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்ட தொடக்க விழாவினை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களைக் கொண்டு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner