எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, நவ. 9 தூத்துக்குடி பெரியார் மய்யம், மனோகரன் மாளிகை, அன்னை மணியம்மையார் அரங்கில் 7.11.2018 அன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடி, குமரி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடனும், கழகக் கொள்கைகளைப் பரப்பும் ஓர் அறிவார்ந்த கூட்டமாகவும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கழக மகளிரணிச் செயலாளர் ஹேமா செயகிருட்டிணன் தலைமை தாங்கினார். திராவிட மகளிர் பாசறையின் அமைப்பாளர் பொ.சாந்தி வரவேற்றுப்பேசினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் பா.தமிழரசி தொடக்கவுரையாற்றினார். குமரி மாவட்ட கழக செயலாளர் சி.கிருஷ்ணேசுவரி, மாவட்ட பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் ஜெயா ஆழ்வார், மாணவர் கழக மாநகரச் செயலாளர் ஆ.கலைமணி, மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், மாவட்ட செயலாளர் மு.முனிய சாமி, பெரியார் மய்ய பொறுப்பாளர் சு.காசி, நெல்லை மண்டல கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநில மகளிரணிச் செயலாளர் அ.கலைமணி இயக்கப் பாடலை சிறப்பாகப் பாடினார். தொடர்ந்து உரையாற்றிய தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் இன்பக்கனி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, நிறைவுரை ஆற்றிய மாநில மகளிர் பாசறைச் செயலாளர் அனைவரும் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் இயக்கத்திற்கும், தந்தை பெரியாருக்கும் ஆற்றிய தொண்டி னையும், இராவண லீலாவை நடத்தி இனஉணர்வை ஓங்கச் செய்ததையும், இந்தியாவிலேயே ஒரு சமூக பகுத்தறிவு இயக்கத்திற்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தியவர் என்பதையும், இயக்கத்திற்காகவும் தந்தை பெரியாரை நீண்ட நாள் வாழ வைக்க வேண்டும் என்பதற் காகவும், தன்னுடைய இளமைப்பருவத்தையே தியாகம் செய்துவிட்டு, தன்னை இயக்கத்தில், தந்தை பெரியாரிடம் ஒப்படைத்துக் கொண்ட ஒப்பற்ற தலைவர் என்பதனையும், ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றபோது சிறையில் மடிந்து, சிறையிலேயே அடக்கம் செய்யப்பட்ட மணல்மேடு வெள்ளைச்சாமி, முதலிய தோழர்களின் உடல்களை, அரசுடன் போராடி மீட்டெடுத்து, அவர்களது உடல்களுடன் மாபெரும் பேரணியை எழுச்சியுடன் நடத்திய வீரத்தையும் பாராட்டிப்பேசி, அன்னை மணி யம்மையார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக்கொண்டாட வேண்டும் எனக்கேட்டுக் கொண்டனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.ஜெயா கொள்கையுரையுடன் நன்றியுரை ஆற்றினார். கூட்ட முடிவில் மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி கீழ்காணும் கழகத் தோழர்களை தூத்துக்குடி மாவட்டப் பொறுப் பாளர்களாக நியமித்தார்.

மாவட்ட மகளிரணித் தலைவர்: ஹேமா செய கிருட்டிணன், மாவட்ட மகளிரணி செயலாளர்: பொ.சாந்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர்: செ.ஜெயா, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்: கலைச்செல்வி நாகராசன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்: சவுந்தரம் பாலமுருகன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்: அழகு செல்வராசு.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் ச.இராசேந் திரன், குமரி மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் கி.அன்பரசி, இரா.அறிவுச்செல்வி, அழகு செல்வராசு, கனகவள்ளி கார்த்திகேயன், சிநேகா, எம்.கயல்விழி, வி.இலக்கியா, கே.அமுதா, நிலானி, சீ.மனோகரன், தி.இல.கார்த்திகேயன், த.பெரியார்தாசன், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஆழ்வார், தூத்துக்குடி மாநகர ப.க.தலைவர் ப.பழனிச்சாமி, மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் த.செல்வராசு, க.குமரேசன், விளாத்தி குளம் ஒன்றிய கழக தலைவர் த.நாகராசன், கலைச்செல்வி நாகராசன், மேனாள் மாவட்ட ப.க. தலைவர் பி.வசந்த குமார் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி செ.செல்லத்துரை கோவில்பட்டி கோ.ராபின்சன் வேதமுத்து கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய பொறுப்பாளர்கட்கும், புதிய உறுப் பினர்கட்கும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. கூட்ட முடிவில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1:

பெரியாரின் மாணாக்கன், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இறப்புக்கும், குமரி மாவட்டம் திங்கள் நகர் பாலையன் அவர்கள் இறப்புக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 2:

உலகத்தலைவர் தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் ஓயாது உழைத்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழாவை (டிச. 2 சுயமரியாதை நாள்) மனித நேய அடிப்படையில் கழகம் நடத்தும் குருதிக்கொடை வழங்குதல், உடல்தானம் வழங்குதல், மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குதல், மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்பாசறை தோழர்கள் சிறப்பாக பங்கு கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான, விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் ஒத்துழைப்பு தருவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

தந்தை பெரியாரின் வாழ்நாளை நீட்டித்தும் அய்யா மறைவுக்குப் பின் இயக்கத்தை பல்வேறு எதிர்ப்புகளுக் கிடையே கட்டிக்காத்த திராவிடத்தாய் அன்னை மணியம் மையாரின் நூற்றாண்டு விழாவினை, 2019 ஆம் ஆண்டு முழுவதும், கழகத் தலைவரால் பொதுக்குழுவில் அறிவித்த 8 செயல்திட்டங்களை செயல்படுத்தி, பெண்ணு ரிமை பெருவிழாவாக கொண்டாட தீர்மானிக்கப்படு கிறது.

தீர்மானம் 5:

2019 பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டில் மகளிரணி, மகளிர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6:

பெண்ணுரிமையில் அடக்கமான 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வில் 4 நீதிபதிகள் பெரும்பான்மை கருத்துக்களை தீர்ப்பாக எழுதி, எல்லா வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று உரிமை வழங்கியுள்ள நிலையில் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்த கேரள அரசுக்கு துணை நின்று எல்லா வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 7:

சேலம் ஆத்தூர் அருகில் பெத்தநாயகன் பாளையத்தை அடுத்த தளவாய்ப்பட்டி கிராமத்தில் மனிதத்தன்மையற்ற செயலான, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி இராஜலெட்சுமி படுகொலையினை கண்டித்தும் அந்த கொடுமையை செய்த கொடூரனுக்கும் துணை நின்ற குடும்பத்திற்கும் சரியான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசையும் காவல்துறையையும் கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

வருகை தந்த தோழர்கட்கு தேநீர், பிஸ்கட்கள் வழங்கி உபசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி மற்றும் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner