எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வீடுதோறும் கதவைத் தட்டி விடுதலை சந்தா சேர்ப்பு ஒரே நாளில் ஒரே வட்டாரத்தில் சந்தாக்கள் - சாதனை

வேதாரண்யம், நவ.9  வீட்டுக்கு வீடு செல்வீர் தமிழா! வீடு ஒவ்வொன்றும், கருஞ்சட்டையரின் வீடு என்ற உரிமையின் அடிப்படையில் கதவைத் தட்டி விடுதலை சந்தா பெறுவீர் என்ற திராவிடர் கழக தலைமைக் கழக அறிக்கை (விடுதலை 5.11.2018)யின் படி செயல்பாட்டிற்கு திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் வட்டாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒரே நாளில்  33 விடுதலை சந்தாக்களை மக்கள் வாரி வழங்கினர். விவரம் வருமாறு:  உரிமையுடன் தமிழன் வீட்டுக்கதவை தட்டுங்கள் தலைமைக்கழக வேண்டுகோள் அறிக்கையை ஏற்று செயலில்  இறங்கிய முயற்சிக்கு  உடனடி பலனாக, வேதா ரண்யம் வட்டாரத்தில் வீடுதோறும் விடுதலை ஒரே நாளில் 33 விடுதலைச் சந்தா தொகை ரூ 51,300 வசூல் ஆனது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 2 இல் ஆசிரியர் அவர்களின் வாழ்நாளை நீட்டிக்கும் மருந்தான விடுதலைசந்தாக்களை வழங்குவது என தலைமைச் செயற்குழு மற்றும் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலின் முடிவின்படி   திருத்துரைப்பூண்டி கழக மாவட்டம் வேதாரண்யம் வட்டாரத்தில் 8.11.2018 அன்று காலை 9.30மணி முதல் இரவு 8 மணிவரை வீடு தோறும் விடுதலை சந்தா  என்ற இலக்குடன்  கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாநில ப.க தலைவர் மா.அழகிரிசாமி,மண்டலச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, ஒட்டுநர் கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் மருதூர் தெற்கு, வடக்கு, ஆயக்காரம்புலம் 1 - ஆம் சேத்தி, 2ஆம் சேத்தி ,3ஆம்சேத்தி,  பஞ்சநதிகுலம், வேதாரண்யம், தோப்புத்துரை, தேத்தாக்குடி, சேதுசாலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் ஈடுபட்டனர் தலைமைக்கழக வேண்டுகோள் அறிக்கையை ஏற்று தமிழன் வீடுகளை உரிமையுடன் தட்டினர்.

விவசாயிகள், ஆசிரியர்கள், வணிகர்கள், அரசு ஊழி யர்கள், சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் என சந்தித்த அனைவருமே வசூல் குழுவினரை அன்புடன் வரவேற்று தேனீர் வழங்கி உபசரித்து ஒரு ஆண்டுக்கான விடுதலை சந்தாக்களை வழங்கி விடுதலை தினந்தோறும் கிடைப்பதற்கு வழி செய்யுங்கள் என கோரிக்கை வைத்தனர். ஒரே நாளில் 33 விடுதலை சந்தாக்கள் திரட்டப்பட்டன. உரிமையுடன் தமிழன் வீட்டுக்கதவை தட்டுங்கள் என்ற தலைமைக் கழத்தின் வேண்டுகோளை ஏற்று எடுத்த முயற் சிக்கு உடனடி பலன் கிடைத்தது. 24 ஆண்டு சந்தா, 9 அரை யாண்டு சந்தா தொகை ரூ51,300 வசூல் செய்யப்பட்டது.

விடுதலை சந்தா வழங்கியோர்

1. டாக்டர் சிவக்கணு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஆயக்காரன்புலம் தவஜோதி ஆண்டு சந்தா ரூ.1800

2. ஆயக்காரன்புலம் ஆசிரியர் மா.ப சுந்தர்ராஜன் ஆண்டு சந்தா ரூ.1800

3.ஆயக்காரன்புலம் தலைமை ஆசிரியர் கு.வைத்திய நாதன் ஆண்டு சந்தா ரூ.1800

4. மருதூர். இராசி.கதிரவன் அரையாண்டு சந்தா ரூ.900

5. ஆயக்காரன்புலம் ஆசிரியர் சொ.மாறன் அரையாண்டு சந்தா ரூ.900

6.ஒன்றிய கழக தலைவர் மருதூர் தெ.ஆறுமுகம் ஆண்டு சந்தா ரூ 1800

7.பஞ்சநதிகுளம் தலைமை ஆசிரியர்       தி.இராமலிங்கம் ஆண்டு சந்தா ரூ 1800

8.ஒன்றிய கழக செயலாளர் மருதூர் சி.பஞ்சாபிகேசன் ஆண்டு சந்தா ரூ.1800

9. பொதுக்குழு உறுப்பினர் மருதூர் சி.இராமசாமி அரையாண்டு சந்தா ரூ.900

10.ஒன்றிய தி.மு.க செயலாளர் மருதூர் ச.குமரவேல் அரையாண்டு சந்தா ரூ.900

11. பஞ்சநதிகுலம் சீ.கனகசுந்தரம் அரையாண்டு சந்தா ரூ.900

12.ஆயக்காரன்புலம் ஆசிரியர் கோ.கலி தீர்த்தான் அரை யாண்டு சந்தா ரூ.900

13.ஆயக்காரன்புலம்  க.சு.அன்பழகன் ஆண்டு சந்தா ரூ.1800

14.பா.ஜ.க மாநில செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேத்தாக்குடி எஸ்.கே.வேதரத்தினம் ஆண்டு சந்தா ரூ.1800

15.முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், சேதுசாலை என்.வி.காமராஜ் ஆண்டு சந்தா ரூ.1800

16. மாவட்ட ப.க. தலைவர் வேதாரண்யம் கவிஞர் புயல்குமார் ஆண்டு சந்தா ரூ.1800

17. நாகை சட்டமன்ற உறுப்பினர்     தமீமுன்அன்சாரி ஆண்டு சந்தா ரூ. 1800

18. வேதாரண்யம் மகாலெட்சுமி சால்ட் வை.செந்தில் ஆண்டு சந்தா ரூ.1800

19. மாவட்டத் தலைவர் ஆயக்காரன்புலம் கி.முருகையன் ஆண்டு சந்தா ரூ.1800

20. பொதுக்குழு உறுப்பினர் ஆயக்காரன்புலம் கோ.சு.மணி ஆண்டு சந்தா ரூ.1800

21. மாநில வணிகர் சங்கத் துணைத் தலைவர் வேதா ரண்யம் எஸ்.எஸ்.தென்னரசு ஆண்டு சந்தா ரூ.1800

22. ஆயக்காரன்புலம் ஆசிரியர் கவிஞர் சீ.முத்துசாமி ஆண்டு சந்தா ரூ.1800

23. ஆயக்காரன்புலம் ஆசிரியர் உ.அரங்கசாமி ஆண்டு சந்தா ரூ.1800

24.ஆயக்காரன்புலம்ஆசிரியர் எஸ்.எஸ்.ஆசைத்தம்பி ஆண்டு சந்தா  ரூ.1800

25.ஆயக்காரன்புலம் ஆசிரியர் அ.தமிழ்ச்செல்வன் ஆண்டு சந்தா ரூ.1800

26. ஆயக்காரன்புலம் மு.ஊ.ம. தலைவர்   ஆர்.துரைராசு ஆண்டு சந்தா ரூ.1800

27.ஆயக்காரன்புலம் தலைமையாசிரியர் வை.இளஞ்செழியன் ஆண்டு சந்தா ரூ.1800

28.ஆயக்காரன்புலம் புலவர் வை.துரைராசு ஆண்டு சந்தா ரூ.1800

29.ஆயக்காரன்புலம் புலவர் வே.சதாசிவம் ஆண்டு சந்தா ரூ.1800

30.திருத்துறைபூண்டி  பள்ளன்கோயில் ஜான்பிரிட்டோ உயர் நிலைப்பள்ளி ஆண்டு சந்தா  ரூ.1800

31. திருத்துறைபூண்டி மாவட்டச் செயலாளர் ச.பொன்முடி அவர்கள் 20 சந்தா வசூல் செய்து தருவதாக உறுதி அளித்து  முதல் தவணையாக 3 அரையாண்டு சந்தா தொகை 2,700 வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner