எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

நாமக்கல், ஆக. 9- நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.8.2018 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் மன்றத்தில் பெரியார் சுயமரி யாதை நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர் கள் தலைமையில் நடைபெற் றது.

மாநில அமைப்பாளர் கருத்துரை

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணத்தின் நோக்கத் தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வ றியா உழைப்பிற்கு கிடைத் துள்ள வெற்றிகளையும், விளக்கி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் த.சண் முகம், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வை.பெரிய சாமி, மாவட்ட ப.க. தலைவர் வழக்குரைஞர் ப.இளங் கோவன், மாவட்ட துணைச் செயலாளர் க.பொன்னுசாமி, ப.குமாரபாளையம் நகர தலைவர் சு.சரவணன், பள் ளிப்பாளையம் ஒன்றிய அமைப்பளார் மு.சீனிவாசன், வேலூர் நகர கழகத் தலைவர் அசோகன், வேலூர் ப.க. தலைவர் முத்துக்கண்ணன், பொத்தனூர் ப.க. தலைவர் வீர.முருகன், ப.க. இராசசேக ரன், பெரியார் மன்ற காப் பாளர் செகதீசன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

நன்கொடை வழங்கியோர் விவரம்

பெரியார் சுயமரியாதை நிறுவனத் தலைவர் க.சண் முகம் ரூ. 10,000, மாவட்ட ப.க. தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோவன் வழிச் செலவு ரூ. 30,000, குமார பாளையம் நகரத் தலைவர் சு.சரவணன் ரூ. 5,000, ப.க. பொறுப்பாளர்கள் முத்துக் கண்ணன், வீர.முருகன் ரூ. 5,000, வேலூர் நகர தலைவர் அசோகன் சுவரொட்டி செலவு, மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுசாமி ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசன் பள்ளிப்பாளையம் சார்பில் ரூ. 3,000.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தமிழின இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை விளக்கியும், விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணம் மேற்கொண்டு 4.9.2018 அன்று நாமக்கல் வருகை தரும் தமிழர் தலைவர்  ஆசிரி யர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது எனவும் தீர்மானிக் கப்படுகிறது.

2) சாதி ஒழிப்பின் மிக முக்கிய அங்கமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற தந்தை பெரி யாரின் பெருவிருப்பத்தை நிறைவேற்றுவதற்கு இடை விடாது போராடி வெற்றி தேடித்தந்துள்ள தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

3) உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட  சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதிகளை நியமிக்க வேண் டும் என்பத வலியுறுத்தி தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் அறிவிப்பின்படி 16.8.2018 அன்று நாமக்கல்லில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner