எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஆக.6 காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.7.2018 அன்று மாவட்ட அலுவலகமான என்.ஆர்.சாமி மாளிகையில் மாவட்ட தலை வர் ச.அரங்கசாமி தலைமையில் நடை பெற்றது. மண்டல கழகத் தலைவர் சாமி.திராவிடமணி, மாவட்ட செயலாளர் கு.வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆகஸ்டு 25 ஆம் நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிவகங்கையில் நடைபெறும் விழிப்புணர்வு பரப்புரை பெரும்பயண கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதை யொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பரப்புரை பயணத் தின் நோக்கம் குறித்து தலைமை கழகப் பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா விரி வாக பேசினார்.

மாவட்ட து.தலைவர் கொ.மணி வண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, நகர தலைவர் ந.செகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, நகர துணை செயலாளர் வீ.பாலு, சாக் கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் சி.செல்வமணி, மானகிரி ச.கைவல்யம், தி.தொ.ச. நிர்வாகி அ.கோவிந்தராசன், மாவட்ட ப.க. துணை செயலாளர் ந. முருகதாசு,ப.சுந்தரம், மூ.நோலன், வாரி யன் வயல் ஜோசப் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் நடைபெறும் விழிப் புணர்வு பரப்புரை பெரும்பயண பொதுக் கூட்டத்திற்கு காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் ரூ 50,000/= நன்கொடையினை வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

மேலும் காரைக்குடி கடைவீதியில் வசூல் பணியில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் சிவகங்கை பொதுக்கூட்டத் திற்கு காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில், தனி வேன் மூலம் தோழர்கள் திரளாகச் சென்று கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நன்கொடை அறிவித்தோர்

கொ.மணிவண்ணன் 5000/=

ந.செகதீசன் 1000/=

வீ.பாலு 1000/=

அ.கோவிந்தராசன் 1000/=

ந.முருகதாசு 1000/=

சி.செல்வமணி 1000/=

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner