எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடக்குத்து, மே 24 வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம் 21.5.2018 அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் தலைமையில் நடைபெற்றது.

மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மண்டல மகளிரணி செயலாளர் இரமாபிரபா ஜோசப், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, வடக்குத்து சி.தர்மலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.முனியம்மாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் நா.தாமோதரன் தொடக்கவுரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், நெய் வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் வடலூர் புலவர் சு.இராவணன், மாவட்ட இளைஞரணி தலை வர் நா.உதயசங்கர், செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, நெய்வேலி நகர செயலாளர் கு.ரத்தினசபாபதி, வடலூர் கோ.இந்திரசித், இரா.குணசேகரன், அப்பியபேட்டை பா.செந்தில்வேல், உ.அறிவுச்செல்வன், கரைமேடு திராவிட அரசு, ஆடுர் அகரம் தா.கனகராசு, வடக்குத்து நூலகர் இரா.கண்ணன், விஜயா, தில்லைநகர், வெங்கடாசலம், வேகாகொல்லை இரா.மாணிக்கவேல், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் குணசேகரன், கீழுர் முன்னாள் ஊராட்சி தலைவர் அருள்முருகன், மாற்று குடியிருப்பு இராமகிருஷ்ணன், வடக்குத்து வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண் டனர். முடிவில் நகர பகுதி செயலாளர் ந.கனகராசு நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner