எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காவேரிப்பட்டணம், ஏப். 22 காவேரிப்பட்டணத்தில்       காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் தடுத்து நிறுத்தக் கோரியும் காவேரிப்பட்டணம் இளைஞர்கள் பொதுமக்கள் சார்பில் மாபெரும் மக்கள் பெருந்திரள் சிறப்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் காவேரிப் பட்டணம் காமராசர் பேருந்து நிலையத்தில் 15.4.2018 அன்று காலை 10.30 மணியளவில் எர்ர அள்ளி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி தொடங்கி வைத்து மத்திய-, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங் களை எழுப்பி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார்.     ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.புகழேந்தி, தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் குமார், பார்த்திபன், சு.சங்கர், விஜய் ஆனந்த், தையல் கலைஞர் சங்க ஒருங்கிணைப்பாளர் தி.குமார், காங்கிரசு முத்து குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த வர்களும், ஊர் பொதுமக்களும், இளைஞர்களும், மகளிரும் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner