எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஏப். 17 8.4.2018 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத் தின் 64 ஆவது நிகழ்ச்சி அதன் தலைவர்  பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா.பவுன்ராசா வரவேற்று உரையாற்றினார். கூட்டத்தின் நோக்கம் பற்றி விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் ச.பால்ராசு, கல்வி அதிகாரி (பணி நிறைவு)  உரையாற்றி னார். இறுதியில் அம்பேத்கரும் பொது சிவில் சட்டமும் என்ற தலைப்பில் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன்  அவர்கள் உரையாற்றினார்கள். அவர் உரையாற்றுகையில்:_ இந்து பாசிச இயக்கவாதிகள் 1985இல் இருந்தே இந்தி யாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப் படவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி அதற்கான தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார்கள். அந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வந்த ஜெரேந்திர மாது வழக்கில் அவர் இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறி சுனிதா என்ற பெண்ணை 2ஆவது திருமணம் செய்தது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த வழக் குக்கு சம்பந்தம் இல்லாமல் பொது சிவில் சட்டம் வரவேண்டியது அவசியம் என்ற கருத்தை வெளியிட்டது. அந்த உச்சநீதிமன்றத் தின் கருத்து இந்து பாசிச வாதிகளுக்கு ஒரு ஊக்கத்தை அளித்தது. ஏதோ இந்தியாவில் இதுவரை பொதுவான சிவில் சட்டம் இல் லாதது போலவும் இனிமேல்தான் அவ்வாறான சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்ற தவறான கருத்தை அவர்கள் பரப்பினார்கள். ஏற்கெனவே சிவில் சட்டங்களும், கிரிமினல் சட்டங்களும் பொதுவாகவே  இருந்து வந் துள்ளது. திருமணம் மற்றும் வாரிசு சம்பந்தப் பட்ட விசயங்களில் மட்டுமே, இந்து, முஸ் லிம், கிறித்துவர்களுக்கு தனியாக சட்டங்கள் உள்ளன. திருமண சட்டத்தை பொருத்தமட்டில் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித் தனி  சட் டங்கள் இருந்தாலும் கூட வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது அவர்களுக்கென சிறப்பு திருமணச் சட்டம் உள்ளது என்றும், எனவே இந்து பாசிசவாதிகள் இஸ்லாம் மதத்தவர்களின் மத உரிமைகளை பறிக்க வேண்டும் என்கிற கெட்ட நோக்கத்தின் விளைவாகவே பொது சிவில் சட்டம் என்ற கோரிக்கையை எழுப்ப ஆரம்பித்தார்கள். டாக்டர் அம்பேத்கர் அவர் கள் சட்ட அமைச்சராக இருந்த பொழுது பொதுவான இந்து சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஜாதிய, பாலியல் வேறு பாடுகளை களைகின்ற வகையில் இருந்த சட்ட வரைவை மிகத்தீவீரமாக எதிர்த்தவர் பாபு ராசேந்திர பிரசாத் தான். அரசியல் சட்டம் பிரிவு 44இல் பொது சிவில் சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி இருந்தாலும் கூட, அர சியல் சட்ட பிரிவுகள் 36லிருந்து 57வரையிலான வழிகாட்டு நெறிகளை நிறைவேற்று வதற்கு இவர்கள் எப்போதும் முயற்சி எடுக் காத நிலையில் பொது சிவில் சட்டம் என்று கூக்குரல் இடுவது மத வெறுப்பின் அடிப் படையில் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிப்பவர்கள் வர்ணாசிரம தருமத்தை வலியுறுத்தும் மனுதர்மத்தையும், கீதையையும், ஒழிக்க வேண்டும் என்று சொல்ல தயாராக இருகிறார்களா? என்ற வினா வையும் எழுப்பினார். இப்போது டாக்டர் அம்பேத்கரை இந்து பாசிச சக்திகள் அரவ ணைத்து ஆதரிக்கிற போக்கு மிக அபாயகர மானது. எனவே அந்த இந்து பாசிச சக்தி களிடமிருந்து அம்பேத்கரை காப்பாற்றவேண் டிய பெரும் பொறுப்பும், கடமையும் அம் பேத்கரிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது என்று கூறி முடித்தார். சிறப்பு பேச்சாளர் நாகை. திருவள்ளுவன் அவர்களுக்கு நினைவுப்பரிசினை பேராசிரியர். சதாசிவம் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இறுதியில் கனி நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner