எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கருத்தரங்கில் (புது டில்லி) கலந்து கொண்டு தமிழகம் திரும் பும் கழக தோழர்கள் முகநூல், கட்செவி வழியாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபெற முடியாத சூழ்நிலை யில் அவர்கள் பயணம் செய்யும் தொடர் வண்டியிலேயே கலந் துரையாடல் கூட்டம் நடத்துவ தென முடிவு செய்யப்பட்டு கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன் தலை மையில் தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்தில் தஞ்சை மாவட்ட மாணவர் கழக செயலாளர் செந்தூர பாண்டியன், வழக்குரை ஞர் இராஜா, பெரம்பலூர் இளை ஞரணி மண்டல செயலாளர் ஆத்தூர் சுரேஷ், மாநில இளை ஞரணி அணி துணை செயலாளர் ஆத்தூர் செல்வம், உடுமலை வடிவேல், இரா.சரவணன், மொட்டையன், பெரியார் திடல் மு.பவானி, புதுகை மண்டல தலைவர் பெ.இராவணன், பொழிசை கண்ணன், மத்தூர் திருமாறன், மா.சங்கிலிமுத்து, காட்டூர் யாழ்திலீபன், இராஜா ஆகியோர் உரைக்குப்பின் மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் மணியம்மை ஆகியோர் தமிழகத்தில் நடை பெற்று வரும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக் காத மத்திய மாநில அரசுக் கெதிரான போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். கழக தலைவர் அறிவிக்கும் அத்துணை போராட்டத்திலும் முழுமையாக பங்கு பெறுவது என இக்கலந் துரையாடலில் முடிவு செய்யப் பட்டது. இறுதியாக காட்டூர் சங்கிலி முத்து நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner