எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டை, ஏப்.15 பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 31.3.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை செந்தில் குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சமரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாணவரணி தோழர் திருவள்ளுவன் கடவுள் மறுப்பு கூறினார். கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டக் கழக செய லாளர் பெ.வீரையன், மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார் ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினார்கள்.

தொடர்ந்து மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரத் தமிழன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கா.தென்னவன், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி தலைவர் சக்திவேல், செயலாளர் கவுதம், பேராவூரணி சு.வசி, சோசி புருச்சோத்தமன், மதுக்கூர் ஒன்றிய இளைஞ ரணி தலைவர் சரவணன், பேராவூரணி நகர அமைப்பாளர் நீலகண்டன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் கதிர்வேல், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் ஜோதி, அமைப்பாளர் இராதாகிருஷ்ணன், பட்டுக்கோட்டை ஒன் றிய செயலாளர் ஆரோக்கியராஜ், அமைப்பாளர் ரெங்கசாமி, பேராவூரணி ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், மாவட்ட மாணவரணி தலைவர் பரமசிவம், நீடாமங்கலம் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜேஷ்கண்ணன், பேராவூரணி நகரத் தலைவர் குழ.அரங்கசாமி, தஞ்சை மாவட்ட இளை ஞரணி செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலகண்டன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பழ.வெங்கடாசலம், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து.துரைராஜ், மாவட்ட அமைப்பாளர் பேராவூணி வை.சிதம்பரம், மாவட்ட துணைத் தலைவர்கள் அரு நல்லதம்பி, சின்னக்கண்ணு, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் காளிதாசன், பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் வழக்குரைஞர் அண்ணாத்துரை, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி ஆகியோர் உரையை தொடர்ந்து இறுதியாக கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் விளக்கவுரை யாற்றினார். இறுதியாக மதுக்கூர் நகர இளைஞரணி அமைப்பாளர் படப்பை அரவிந்த் நன்றி கூறினார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

"புதிய பார்வை" இதழின் ஆசிரியர் ம.நடராசன் மறை விற்கும், எடமேலையூர் பெரியார் பெருந்தொண்டர் கே.எஸ்.காசிநாதன், மன்னார்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் வாஞ்சியூர் இளங்கோவன் அவர்களின் தந்தையார் பிச்சைக்கண்ணு, பேரண்ட ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்க லையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: கும்பகோணத்தில் ஜூலை 8ஆம் நாள் நடைபெறும் திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் வழங்குவதோடு, பட்டுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான தோழர்களை பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பட்டுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழக கொள்கை விளக்க கூட்டங்கள் மற்றும் அவ்வப்போது ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

7.4.2018 சனி, மதுக்கூர், 8.4.2018 ஞாயிறு, பட்டுக் கோட்டை, 9.4.2018 திங்கள், பேராவூரணி,  14.4.2018 சனி, மன்னார்குடி, (நான்கு கூட்டங்களும் நடந்து முடிந்தது) 18.4.2018 ஞாயிறு, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் கலந்து ரையாடல் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 4: விருத்தாச்சலத்தில் நடைபெற்ற இளை ஞரணி கலந்துரையாடல் கூட்ட முடிவின் படி 200 உண்மை சந்தாக்களை திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பில் ஒன்றியங்கள் தோறும் கலந்துரையாடல் கூட்டங் கள் நடத்துவது எனவும், இளைஞரணி அமைப்பை வலுப் படுத்தும் வகையில் ஒன்றிய இளைஞரணி பொறுப்புகளை புதுபிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: விருத்தாச்சலத்தில் நடைபெற்ற இளை ஞரணி கலந்துரையாடல் கூட்டமுடிவின் படி 200 உண்மை சந்தாக்களை திரட்டி வழங்குவது என முடிவு செய்யப் படுகிறது.

தீர்மானம் 5: பட்டுக்கோட்டை இளைஞரணி சார்பில் ஒன்றியங்கள் தோறும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத் துவது எனவும் இளைஞரணி அமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய இளைஞரணி பொறுப்புகளை புதுப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அமல்படுத்தாமல் தொடர்ந்து தமி ழகத்தை வஞ்சித்துவரும் மத்திய பிஜேபி அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 7: பட்டுக்கோட்டையில் இளைஞரணி மண் டல மாநாடு

தஞ்சை மண்டல இளைஞரணி மாநாட்டை பட்டுக் கோட்டையில் மிக எழுச்சியோடு நடத்துவது எனவும், மாநாட்டிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒப்புதல் வழங்கிடுமாறும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8: கழக இளைஞர்கள், மாணவர்கள் கொள்கை தெளிவு பெறும் வகையில், பெரியாரியல் பயிற்சி வகுப்பு பேராவூரணியில் நடத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

பேராவூரணி ஒன்றிய இளைஞரணி தலைவர்:  பா.சக்திவேல், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி செய லாளர்: செ.கவுதமன், மதுக்கூர் நகர இளைஞரணி அமைப் பாளர்: சு.அரவிந்த்குமார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner