எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடசேரி, பிப். 25- தஞ்சை மாவட் டம் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி கிராமத்தில் திராவிடர் கழக தோழர் மு.புண்ணியகோடி (வயது 71) கிளை கழக விவ சாய அணி அமைப்பாளராக இருந்து பணியாற்றியவர்.

கடந்த 26.1.2018 அன்று காலை 11 மணி நினைவு நாள் படத்திறப்பு நிகழ்ச்சி தோழர் குஞ்சிதபாதம் கலை அரங்கத் தில் நடைபெற்றது. கிளைச் செயலர் ராமசாமி வரவேற்பு ரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாநில திரா விடர் கழக அமைப்புச் செய லாளர் இரா.குணசேகரன் படத் தினை திறந்து வைத்தார். கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் இரங்கல் உரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு மாநில ப.க.துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வ.ஞான சிகாமணி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் மா.இராசப்பன் ஒன் றிய செயலாளர் அ.உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியில் மாநில ப.க. பொதுச் செயலாளர் மா.அழ கிரிசாமி தலைமை கழக சொற் பொழிவாளர்கள் இரா.பெரி யார் செல்வன், இராம.அன்ப ழகன் ஆகியோர் மூடநம்பிக்கை கேடுகளை விளக்கி சுமார் 1 மணி நேரம் உரையாற்றினர். புண்ணியகோடி அவர்களது மகன் பு.சின்னதுரை நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் த. செகநாதன், நா.இராமகிருட் டினன் (வீரவிளையாட்டு கழக செயலாளர்), பூவை.இராம சாமி, முக்கரை செல்வராசு, உள்ளிக்கோட்டை குமாரசாமி, நல்லிகோட்டை நல்லதம்பி, சென்னை சைதை மு.நெடுங் கிள்ளி, பொதுக்குழு உறுப் பினர் வடசேரி இ.அல்லிராணி, ப.ஜெயந்தி, ப.தமிழருவி, தொண்டராம்பட்டு வீரமணி, ஒக்கநாடு இராசப்பா, மாநல் பரமசிவம் (ஒன்றிய அமைப் பாளர்), ஞா.ராணி, கே.பி.இரா மையன் மற்றும் ஊர் பொதுமக் கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner