எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, பிப். 25- 16.02.2018 அன்று மாலை 6.00 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் சட்டக் கல்லூரி திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பங்கேற்று தந்தை பெரி யார் நமக்களித்த திராவிடர் கழகம் மட் டும் தான் மக்களை சுயமரியாதையுள்ள வர்களாகவும், சமூக இழிவை கண்டித்து துணிச்சலாக குரல் எழுப்பும் போராளி களாகவும், சமத்துவ சமுதாயம் படைக் கும் பொது வாழ்க்கை பணியாளர்களா கவும் மாற்றி வரும் இயக்கம்.

சூத்திர மக்கள் அவர்கள் எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும் செல்வந் தர்களாக இருந்தாலும், பார்ப்பனிய இந்துத்துவ சட்டப்படி பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்ற பிறவி இழிவு, உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத கொடுமை, இதனை கண்டித்து குரல் எழுப்பிய தலைவர் தந்தை பெரி யார் தந்த இயக்கத்தில் மாணவர்கள் தங்களை ஒப்படைத்து கொள்ள முன் வர வேண்டும்.

மாணவர்கள் தன்மானமிக்க போரா ளிகளாய் இன, மொழி, உணர்வு மிக்க வர்களாய் திகழ வேண்டும் என பாடுபட்டுவரும் தமிழர் தலைவர் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையேற்று செயலாற்ற, மாணவர்கள் திராவிடர் மாணவர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமெனவும், இணைத்துக் கொண்ட மாணவர்களுக்கு பாராட்டை யும் தெரிவித்து உரையாற்றினார்.

கூட்டத்திற்கு தலைமையேற்று சிறப்பித்த அமைப்புச்செயலாளர் ஊமை. செயராமன் தமது உரையில்: ஒடுக்கப்பட்ட மாணவ சமுதாயத்தின் கல்வி உரிமைகளுக்காக போராடும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இயக்கமாம் திராவிடர் கழ கத்தின் மாணவர் அமைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டியது மாணவர்களின் வரலாற்றுக் கடமை என்று குறிப்பிட்டார்.

பங்கேற்றோர்

மாநில ப.க.செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மண்டலத் தலைவர் பெ.மதிமணியன். மண்டலச் செயலாளர் கரு.பாலன், மாவட்டச் செயலாளர் சி. காமராசு, மாவட்ட துணைத் தலைவர் கள் க.கதீர், பிமா.தமிழ்பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் பே.கோவிந்த ராசு, மாவட்ட ப.க தலைவர் க.செந் தில், மாவட்ட ப.க.துணைத் தலைவர் இர.கிருட்டிணமூர்த்தி, மேனாள் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி, கு.தமிழ்ச்செல்வி, மா.சுந்தரம், மா.சென்றா யன், அ.சங்கீதா, வி.சோபியா, மு.அர்ச்சுணன், சி.இராமசாமி, இர.இராசா. த.மணிவேல், சி.பகத்சிங், தே.சத்தியராஜ், க.இராமசந்திரன், ம.சுதா, தருமபுரி சட்டக் கல்லூரி மாணவர்கள், பி.பூபதி, பி.பாக்கியராஜ், கே.அரிகரன், எம்.திலீப்ராஜ், எஸ். விக்கினேஷ். எம்.மகேஷ்குமார், எஸ். குமாரசாமி, நா.பஸ்வந்த், மாணவர்கள்: எ.டார்வின், முகமது ஆனஸ், சக்தி, நா.பஸ்வந்த், கே.சச்சின், எம்.சாது, கே.சுவின்குமார், சி.சக்திவேல், எம்.வெங்கடேஷ், சி.நவீன், கி.செம்மொழி, கி.வீரமணி. ம.செம்மல் வீரமணி, செ.இனியன் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

மாணவரணி பொறுப்பாளர்கள்

கருப்புச்சட்டை மா.முனியப்பன் - மாவட்டத்தலைவர், பீம்.விபிசிங் மாவட்ட அமைப்பாளர், மா.செல்லத் துரை மாவட்டச் செயலாளர், இர.மாதேஸ்வரன் ஒன்றிய மாணவரணித் தலைவர், பாப்பிரெட்டிபட்டி, இசமர சம் ஒன்றிய மாணவரணித் தலைவர், கடத்தூர், அ.விஜய் ஒன்றிய மாணவ ரணிச் செயலாளர், கடத்தூர், அ.பூ.வர சன் ஒன்றிய மாணவரணிச் செயலாளர், பாப்பிரெட்டிபட்டி.

தருமபுரி சட்டக்கல்லூரி

காசி.பாஸ்கர்- திராவிடர் மாணவர் கழகத் தலைவர், இரா.அசய் - திராவிடர் மாணவர் கழகச் செயலாளர்

அரசு கலைக்கல்லூரி

ஆர்.வசந்தகுமார் - திராவிடர் மாண வர் கழகத் தலைவர், கோவி.சந்திரபோசு - திராவிடர் மாணவர் கழகச் செயலாளர், ச.சூர்யா - திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்

விவேகானந்தா பொறியியற் கல்லூரி

சி.மணியம்மை - திராவிடர் மாண வர் கழக அமைப்பாளர்

காமலாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இரா.கனிமொழி--திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்

திராவிடர் கழக இளைஞரணி

கே.கார்த்திக் --- இளைஞரணித்துணைத் தலைவர்,  ஜே.பிரசாந்த் -- இளைஞரணி துணைச்செயலாளர், - சி.காமராஜ் -- இளைஞரணி துணை அமைப்பாளர்

இறுதியாக சட்டக் கல்லூரி திரா விடர் மாணவர் கழக தலைவர் காசி.பாஸ்கர் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner