எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, மே 13- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலை வர் இராங்கியம் இராமதிராசன் கடந்த 3.5.2017 அன்று ராங்கியத் தில் மறைவுற்றார். எவ்வித மூடச்சடங்குமின்றி அவரது உடலடக்கம் நடைபெற்றது.

74ஆம் வயதில் மறைவுற்ற அவரின் நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்ச்சி 75,2017 அன்று காலை 11 மணியளவில் ராங் கியம் அவரது இல்ல வளாகத் தில் மண்டல தலைவர் பெ. இராவணன் தலைமையில் நடந்தது. மாவட்ட ப.க. செய லாளரும் அய்யாவின் மகனு மான இரா.மலர்மன்னன் வர வேற்றுப் பேசினார்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மறைந்த சுயமரியாதைச் சுட ரொளி இராமதிராசனின் படத்தினை திறந்து வைத்து, அவரின் கொள்கைச் செழு மையை, பெரியார் கொள்கைப் பரப்பு தொண்டினை, கட்டுப் பாடுமிக்க தொண்டராக கழகத் தில் செயலாற்றிய சிறப்பினை விளக்கி நினைவுரையாற்றினார்.

தலைமைச் செயற்குழு உறுப் பினர் சாமி.திராவிடமணி, புதுக்கோட்டை மாவட்ட தலை வர் மு.அறிவொளி, அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரி முத்து, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், அறந்தை மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ, காரைக்குடி கழக மாவட்ட செயலாளர் என்னாரசு பிராட்லா, சென்னை தி.அருள்வேந்தன், பெயரன் ராங்கியம் இ.நாவளவன், தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், ராங்கியம் பேராசிரியர் மு.சீனிவாசன் ஆகி யோர் நினைவுரையாற்றினர்.

கழகத்தின் சார்பில் மறைந்த ராமதிராசனின் வாழ்வினையர் சரசுவதி, மகன்கள் இளஞ்செழி யன், மலர்மன்னன், கலையர சன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. கழகத்தோழர்கள் தி.ராசமாணிக் கம், வடகுத்து திராவிடன், வீர.வசந்தா, மாரியப்பன், ரெ. கி.தர்மராசு, செ.சு.தர்மசேகர், த.கார்த்திகா, ஜான்சிராணி, த.செயலட்சுமி, துணைத் தலை வர் செ.ராசேந்திரன், அ.முத்து குமாரன், குழ.முருகவேள், ச.மல் லிகா மற்றும் ஆசிரியர்கள், உற வினர்கள், நண்பர்கள் பங்கேற் றனர். வீரவணக்கம் தெரிவிக்கப் பட்டபின் இரா.இளஞ்செழி யன் நன்றி கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner