எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ராணிப்பேட்டை, ஏப். 17- வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் ராணிப் பேட்டை மாலதி குபேந் திரா திருமண மண்டபத்தில், 7.4.2017 அன்று மாலை 6 மணி யளவில் நடைபெற்றது.

வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ. ஞானசேகரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். ஆலப்பாக்கம் இராவணன் கடவுள் மறுப்பு கூறியும் அனைவரையும் வரவேற்றும், தந்தை பெரியார், தமிழர் தலைவர் பற்றிய பாடல்களைப் பாடினார்.

காஞ்சி மண்டல தலைவர் பு.எல்லப்பன், காஞ்சி மண் டல செயலாளர் காஞ்சி கதிர வன், வேலூர் மண்டல தலை வர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக் குமார், வேலூர் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், அரக்கோணம் மாவட்ட தலை வர் சு.லோகநாதன், அரக்கோ ணம் மாவட்ட செயலாளர் செ.கோபி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

இரா.குணசேகரன்

தலைமை செயற்குழு உறுப் பினர் உரத்தநாடு இரா.குணசேக ரன் அவர்கள் சிறப்புரையாற்றி னார். அவர் தனது உரையில்: தமிழர் தலைவரின் சிறப்புகள், ஓய்வறியா உழைப்பு, அரசி யலில் இக்கட்டான நேரத்தில் செயல்படும் முறை ஆகியவை பற்றி சிறப்பாக எடுத்துரைத் தார். மேலும் வரும் மே மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் நெமிலி யில் நடைபெறவுள்ள பெரியா ரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கி சிறப்பாக செயல்பட வேண்டும்.

தமிழர் தலைவரின் வாழ் வியல் சிந்தனை பாகம் 12 தொகுப்பு நூலினை சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடத்தி அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

வெ.ஞானசேகரன்

அமைப்பு செயலாளர் வெ. ஞானசேகரன் தனது உரையில்: தமிழர் தலைவர் தனது உடல்நிலையிலும் ஓய்வறியா உழைப்பினை நல்கி வருகிறார். கழகத் தோழர்கள் இதனை உணர்ந்து பணியாற்ற வேண் டும் என்றார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நன்கொடை வழங்கியவர்கள்

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் - ரூ. 1000, போளூர் சு.பன்னீர்செல்வம் - ரூ. 500

நன்கொடை அறிவித்தவர்கள்

பொதுக்குழு உறுப்பினர் சொ.ஜீவன்தாஸ் - ரூ. 20,000, வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன் - ரூ. 5000, வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக் குமார் - ரூ. 3000, அரக்கோணம் மாவட்ட செயலாளர் செ.கோபி - ரூ. 5000, மாவட்ட ப.க. செய லாளர் செ.வெங்கடேசன் - ரூ. 5000, மாவட்ட இளைஞரணி தலைவர் சி.சுரேஷ் - ரூ. 3000, வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன் மொழி - ரூ. 3000, பொதுக்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை பொன்.பெருமாள் (வாழ்வியல் சிந்தனை 12ஆம் பாகம் 50 புத்தகம்) - ரூ. 10,000

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) அரக்கோணம் மாவட்ட ப.க. செயலாளர் செ.வெங்க டேசன் சகோதரர் செல்லகுமார், வடமணப்பாக்கம் வி.வெங்கட் ராமன் சகோதரர் திரைப்பட இயக்குநர் செய்யாறு இரவி, செய்யார் மாவட்ட இளைஞ ரணி செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2) அறிவுலகப் பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரி யார் கொள்கையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பெரியா ரியல் பயிற்சி முகாமை வேலூர், காஞ்சி மண்டலங் களின் சார்பில் அரக்கோணம் மாவட்டம் நெமிலியில் மே மாதம் 6, 7 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட் டம் உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

3) மனித குலம் அத்தனைக் கும் அருமருந்தாக வழித்துணை வனாக திகழும் வாழ்வியல் சிந்தனைகள் 12ஆம் தொகுதி யினை குடியாத்தம், அரக்கோ ணம், சேத்துப்பட்டு, காஞ்சிபு ரம் ஆகிய ஊர்களில் மிகச் சிறப்பாக ஏப்ரல் 21 முதல் 25 வரை ஆகிய தேதிகளில் நடத் துவதென முடிவு செய்யப்படு கிறது.

4) வருகிற 7.5.2017 அன்று நெமிலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற் பாடு செய்வது எனவும், ஒப்பு தல் வழங்குமாறும் ஆசிரியர் அவர்களை இக்கூட்டம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.

5) உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலை ஏட்டிற்கு அதிகமான சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவரிடம் நெமிலியில் அளிப்பதென முடிவு செய்யப்படுகிறது.

6) மகளிரணியினர் பங் கேற்று சிறையேகிய மனுதர்ம எரிப்புப் போராட்டம் மற்றும் இளைஞரணி, மாணவரணியினர் பங்கேற்று நுழைவுத் தேர்வினை எதிர்த்து நடை பெற்ற இருசக்கர வாகனப் பேரணி ஆகிய நிகழ்வுகளை சிறப்பாக வரவேற்று உண வளித்தும் சிறப்பித்த கழகப் பொறுப்பாளர் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

நிகழ்வில் கலந்து கொண்டோர்

வேலூர் மாவட்ட அமைப் பாளர் ச.கி.செல்வநாதன், வேலூர் மாநகர தலைவர் நெ.கி.சுப்ர மணி, சத்துவாச்சாரி நகரத் தலைவர் ச.கி.தாண்டவமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட செயலா ளர் இரா.சக்திவேல், காஞ்சி இளையவன், பொறியாளர் செந்தூர் பாண்டியன், தஞ்சை க.திருப்பதி, ப.ஜோதி ஆகி யோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பன்னியூர் ஜோதி நன்றி கூறினார்.

அரக்கோணம் மாவட்ட கழக துணைச்செயலாளர் பொன்.வெங்கடேசன் தனது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்ததையும், அக்குழந்தைக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதாகவும் அறிவித்தார். அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அமைப்புச் செயலா ளர் வெ.ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன் மருத் துவமனைக்கு சென்று தாய் மற்றும் குழந்தையைப் பார்த்து வாழ்த்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner