எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டை  நகரத்தலைவர் பொறியாளர் வை.சேகர் அவர்கள் மூலமாக திரட்டப்பட்ட  விடுதலை' ஒரு ஆண்டு சந்தா, 4 அரையாண்டு சந்தாவிற்கான தொகை ரூ.7,300 அய் மாவட்டச் செயலாளர் பெ.வீரையன் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  (பேராவூரணி, 12.09.2018)

பட்டுக்கோட்டை  கழக மாவட்டம் பேராவூரணி, சேதுபாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில்  திரட்டப்பட்ட  விடுதலை' அரை ஆண்டு சந்தா 25-க்கான தொகை ரூ 20,250 மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலகண்டன், மாட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன் மாவட்ட ப.க. புரவலர் ஆசிரியர் வேலு, மாவட்ட துணைத் தலைவர் அரு.நல்லத்தம்பி  (பேராவூரணி, 12.09.2018).

சிவகங்கை கழக மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் திரட்டப்பட்ட விடுதலை' அரையாண்டு சந்தா ஒன்று; ஆண்டு சந்தா 9 ஆகியவற்றிற்கான தொகை ரூ.16,470-அய் மாவட்டத் தலைவர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பையா, மணிமேகலை, மாவட்ட துணை செயலாளர் கவிஞர் தங்கராசு ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர் (12.9.2018).

காரைக்குடி கழக மாவட்டத்தில் திரட்டப்பட்ட விடுதலை' சந்தா இரண்டாவது தவணையாக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 12.9.2018 அன்று வழங்கப்பட்டது. 7 அரை ஆண்டு சந்தா, 3 ஆண்டு சந்தாவும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் மு.சு.கண்மணி, மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, நகரத் தலைவர் தி.க. கலைமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டம் ரேகடஅள்ளி த.சிறீதரன் குடும்பத்தினர் சார்பில் ஓராண்டு விடுதலை' சந்தா ரூ.1,800 அய் மாவட்ட செயலாளர் அ.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner