எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு, ஜூலை 5 உரத்தநாடு நகர இளை ஞரணி மற்றும் மாணவர் கழக சார்பில் உரத்தநாடு பேருந்து நிலையத்தில் ஜூலை 8ஆம் தேதி குடந்தையில் நடைபெற இருக்கும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டை விளக்கி தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்  சற்குணன் தலைமையிலும் கண்ணை த.ஜெகநாதன் ஒன்றிய பகுத்தறிவாளர் தலைவர் ப.நேரு, ஒன்றிய இளைஞரணி தலைவர் அன்பரசன் ஆகியோர் முன்னிலையிலும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர்  தஞ்சை இரா.பெரியார்செல்வன்  சிறப்புரையாற்றி னார்கள்.

நிகழ்ச்சியில் பெரியார் வீரவிளை யாட்டு கழக மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் நகர தலைவர் பேபி.ரெ.ரவிச் சந்திரன் மேற்கு பகுதி செயலாளர வீர.இளங்கோவன், பூவை.இராமசாமி, நெடுவை. கு.லெனின், கே.எஸ்பி.சக்ரவரத்தி, மாதவன், ராஜேஷ், மண்டலக் கோட்டை இரா.மோகன்தாஸ், அரவிந்தன், வளவரசு, நவீன், நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார்,  நகர இளைஞரணி செய லாளர் பேபி.ரெ.ரமேஷ், வழக்குரைஞர் திராவிட எழில் உள் ளிட்ட கழக தோழர்களும் இளைஞர்களும் மாண வர்களும் பொதுமக்களும் பெரு மளவில் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner