எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோவை மண்டல மகளிரணி கலந்தாய்வில் கழகப் பொருளாளர் உரை வீச்சு

கோவை, மே 15- பெண்ணுரிமையை வென்றெடுக்க மே-27ல் திருச்சியில் கூடுவோம் என்று கோவை மண்டல கலந்தாய்வில் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி உரை வீச்சு நிகழ்த்தினார்.

மாநாடும், கலந்தாய்வும்

திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிடர் மகளிர் பாசறை சார்பில் வருகின்ற 27.05.2017 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டிற்கு தமிழகப் பெண்களை பேரணியாக திரட்ட வேண்டுமென்ற நோக்கோடு கழகத்தின் சார்பில் தமிழக மெங்கும் மண்டல வாரியாக மகளிரணி கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறுவதன் ஒரு பகுதியாக கோவை மண்டல மகளிரணி சார்பில் 11.05.2017, வியாழன் மாலை 6 மணியளவில் கலந்தாய்வுக் கூட்டம் கோவை, சுந்தரா புரம் ம.சந்திரசேகர் இல்லத்தில் துவங்கி நடைபெற்றது.

கோவை மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச் செல்வி தலைமை தாங்கினார். கழக பொதுக்குழு உறுப் பினர் ச.திலகமணி அனைவரையும் வரவேற்றார். வ.ராஜேஸ்வரி, செ.ஜோதிமணி, கு.புனிதா உள்ளிட்ட மக ளிரணியினர் முன்னிலை வகித்தனர். பெரியார் பிஞ்சு கார்முகிலி கடவுள் மறுப்பு கூறினார்

கழகப் பொருளாளர் உரை

நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்த கழகப் பொருளாளர் சு.பிறைநுதல்செல்வி அவர்கள் உரை நிகழ்த்தியதாவது:

பெண் சிசுவை பிறப்பதற்கு முன்பே அழிப்பதும், பிறந்த பின் அழிப்பதுமான பெண் கரு கொலை, பெண் சிசு கொலை ஆகிய இரண்டு சமுதாய பிற்போக்கு நிகழ்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக ஆண்களின் சராசரி விகிதத்தை விட பெண் களின் சராசரி விகிதம் குறைந்து பாலியல் வன்கொடுமை அநீதிகளும், ஆண்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் பெண் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் பிள்ளை பெறவும், கணவனுக்கு பணிவிடை செய்யவுமே தவிர சமுதாயத்தில் வேறு எந்த உரிமையும் பெண்களுக்கு இல்லை என்று மனுதர்மம் என்ற மனித அதர்மம் கூறுகிறது. கடந்த மார்ச் 10 அன்று அன்னை மணியம் மையார் பிறந்த நாளில் நமது ஆசிரியர் அவர்களின் உத்தரவுப்படி மனுஸ்மிருதியை எரித்து பெண்ணுரிமை மீட்பை உயர்த்திப் பிடித்தோம். அதேபோல் வருகிற 27 ஆம் தேதியன்று கழகத் தலைவர் வழிகாட்டுதலின்படி திருச்சியில் நடைபெறுகின்ற மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டில் பெண்ணுரிமை காக்கவும், வஞ்சிக்கப் படும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெறவும் நாம் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும்!

பெண்கள் நகை, துணி, அலங்காரம் போன்றவற்றி லுள்ள ஆசையையும், மூடத்தனத்தையும் விட்டு சாதனை கள் புரிய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லத்தான் திருச்சியில் மகளிர் மாநாடு நடைபெறுகிறது!

பெண்கள் பகுத்தறிவு பெற்றால் தான் அவர்களின் பிள்ளைகளையும் அறிவானவர்களாக வளர்க்கமுடியும்! பெண்கள் மூடத்தனம் மிக்கவர்களாக இருந்தால் பிள்ளை கள் மிருக கன்றுகளாகத் தான் வளரும் என்றார் தந்தை பெரியார் ஆகவே மூடத்தனத்தை ஒழித்து, பெண்களால் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் என அன்னை நாகம் மையார் நினைவு நாளில் சூளுரை ஏற்போம்! கழகத் தோழர்கள் மகளிர்களை பெருமளவில் மே 27 திருச்சி மாநாட்டில் பங்கேற்கச் செய்ய பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

கோ.செந்தமிழ்செல்வி

கூட்டத்தில் பங்கேற்ற மாநில மகளிர் பாசறை செய லாளர் கோ.செந்தமிழ்செல்வி குறிப்பிட்டதாவது: முற் போக்குக் கருத்துக்கள் மகளிரிடத்தில் செல்லவேண்டும், பெண்கள் வரலாறு படைக்கவேண்டும் என்ற நோக்கில் காலத்தின் தொலைநோக்காளர் நம்முடைய தமிழர் தலை வர் அவர்கள் திருச்சியில் மே 27 அன்று மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டை அறிவித்துள்ளார்கள்! ஜாதி ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு இரண்டையும் கண்களாகக் கொண்டது தான் நம்முடைய இயக்கம்!

தந்தை பெரியாருக்கு பின் அன்னை மணியம்மையார் அவர்கள் மேற்கொண்ட கழகப்பணி மிகவும் போற்றத் தக்கது! நாகம்மையார், மணியம்மையார் என்கிற இரு பெரும் பெண் புரட்சியாளர்களை உள்ளடக்கிய இயக்கம் திராவிடர் கழகம்! பெண்கள் வெற்றியடைய வேண்டு மென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள் மகளிர்கள் மத்தியில் சென்றாக வேண்டும்! நடைமுறையில் பெண் களுக்கான உரிமைகள் பெயரளவிலேயே இருக்கிறதே யொழிய உரிமைகளை தொடர்வதற்கான, செயல்படுத்துவ தற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகிறது! இதை எச்சரிக்கையோடு சிந்தித்து தான் பெண்ணுரிமை பேரிகை முழங்க தொலைநோக்கோடு மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது!

மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 மகளிர்களை பங்கேற்க செய்ய தோழர்கள் களப்பணியாற்ற வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

“பொறியாளர்” இன்பக்கனி

மகளிரணி கலந்தாய்வில் பங்கேற்ற வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இ.இன் பக்கனி பேசியதாவது:

மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்டம் இன்றும் நிறை வேற்றப்படாத காலகட்டத்தில், பாலியல் வன்கொடு மைகள் நடைபெறுகிற, கலப்பு மணம் புரிந்த தம்பதிகள் ஆணவக்கொலை செய்யப்படுகிற இன்றைய சூழ்நிலை யில் மகளிர் மத்தியில் விழிப்புணர்வை  ஏற்படுத்திட மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்துகிறது.

இந்தியா முழுவதிலும் ஒரே கல்வி நடைமுறையில் இல்லாதபோது ஒரே மாதிரியான நீட் தேர்வை மத்திய அரசு நடத்தியுள்ளது, நாம் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று முன்னேறியுள்ளோம்  இந்த முன்னேற்றத்தை ஒழிக்கும் முன்னோட்டமாகத்தான் மத்திய பிஜேபி அரசு இந்த நீட் தேர்வை நடத்தியுள்ளது. மாநில அரசு தன் பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவும், பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும் மாணவர்களின் எதிர்காலத்தை விற்க தயாராகிவிட்டார்கள்! பெண்களுக் கான உரிமையையும், நமது மாநிலத்திற்கான உரிமைக ளையும் வென்றெடுக்க மே 27 திருச்சி மாநாட்டில் பெருந்திரளாக மகளிர்கள் பங்கேற்க கழக மகளிரணியினர் ஏற்பாடு செய்யவேண்டும் என்று பேசினார்.

உரையாற்றியோர்

திராவிடர் கழகத்தின் கோவை மண்டல தலைவர் கருணாகரன், செயலாளர் ம.சந்திரசேகர், கோவை மாவட்ட தலைவர் சிற்றரசு, திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, பக மாநில துணைத்தலைவர் ஆ.முனியன், பொறியாளர் பரமசிவம், மேட்டுப்பாளையம் ராஜா, மகளிரணியைச் சார்ந்த தேவிகா, “பெரியார் பிஞ்சு” அன்புமதி ஆகியோர் உரையாற்றினர்.

பங்கேற்றோர்

திராவிடர்கழகத்தின் தலைமைக்கழக பேச்சாளர் புலியகுளம்.க.வீரமணி, நீலமலை மாவட்ட செயலாளர் வேணுகோபால், கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ச.மணிகண்டன், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆ.பிரபாகரன், தெற்கு பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, கவிக்கிருட்டிணன், மே.பா.ரங்கசாமி, சுந்தராபுரம் சிவக்குமார், இலைக்கடை செல்வம், குறிச்சி தமிழ்முரசு, மாணவரணியைச் சார்ந்த மதியரசு, விஜயன், கவுதமன், யாழினி, பூங்குழலி, சுபாசினி, பிரீத்தி, இளைஞரணியைச் சார்ந்த பிரபு, வெற்றிச்செல்வன், மகளிரணியைச்சார்ந்த மேட்டுப்பாளையம் நாகமணி உள்ளிட்ட திக, பக தோழர்கள், ஒத்த கருத்துடையோர் திரளாகப் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்

1.  மதவாதிகளால் கோவை, உக்கடத்தில் கடந்த 16.03.2017 அன்று படுகொலை செய்யப்பட்ட பகுத்தறி வாளர் பாரூக்கிற்கு கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

2. அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் (10.3.2017) பெருந்திரளாக பங்கேற்று கோவையில் சிறை சென்ற தோழர்களுக்கும், குறிப்பாக இயக்கம் சாராமல் பங்கெடுத்த ப.தமிழரசி, ஞா.மங்கையர்க்கரசி, ச.முத்துலட்சுமி, வ.தங்கேஸ்வரி, ப.விமலா, அ.கரோலினா, ஞா.ராஜேஸ்வரி இராவணன், வேணி உள்ளிட்ட காட்டாறு குழுவினருக்கும் கூட்டத் தில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

3. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் “அயோத்தி தாசர் ஆதவன் விருது” வழங்கி சிறப்பிக்கப் பட்ட திராவிடர்கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி. பூங்குன்றன் அவர்களுக்கு கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

4. நீட் தேர்வில்  சோதனை என்ற பெயரில் மாணவர் களை உளவியல் பாதிப்புக்குள்ளாக்கி குறிப்பாக மாண விகளை அவமானப்படுத்தி, உள்ளச் சிதைவை ஏற்படுத் திய மத்திய மருத்துவ தேர்வு குழுவிற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

5. சிறப்பாக செயல்படும் திராவிடர்கழக மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் மகளிர் களம் -2017 என்னும் ஓராண்டு செயல் திட்டத்தில் கோவை மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ள மகளிர் பயிற்சி வகுப்பு என்னும் ஓராண்டு களப்பணியினை சிறப்பாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

6. வருகிற மே 27 ல் திருச்சியில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மகளிர் அணிவகுப்பு பேரணி, மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு வெற்றி பெற கழகத் தலைவர் வழிகாட்டுதலின்படி அனைவரும் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

7. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது 100 மகளிர் தோழர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கழக பொறுப்பாளர்கள் தக்க ஏற்பாடுகளை செய்திட வேண்டு மென முடிவு செய்யப்பட்டது.

9. ஒவ்வொரு கழக மாவட்டமும் மாநாடு நன்கொடை நிதியாக குறைந்தது ரூ.10 ஆயிரம் வழங்கிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தின் நிறைவாக கழக மகளிரணியைச் சார்ந்த செ.முத்துமணி நன்றி கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner