எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜகவை அம்பலப்படுத்தும் கேரள பிஜேபி தலைவர் ஓ.ராஜகோபால் கட்டுரை

திருவனந்தபுரம், நவ. 9 -சபரிமலை யில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என வலுவாக குரல் எழுப் பிய பாஜக தலைவர் ஓ.ராஜகோபால் 19 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை வெளியாகி பாஜக வினரின் இரட்டை வேடத்தையும், நய வஞ்சக சூழ்ச்சியையும் அம்பலப்படுத்தி உள்ளது. மாத்ருபூமி என்கிற மலை யாள நாளிதழ் 1999இல் வெளியிட்ட சபரி மலை சிறப்பிதழில் இரண்டு பக்கக் கட்டுரைஒன்றை பாஜக தலைவர் ஓ.ராஜ கோபால் எழுதி யுள்ளார். அதன் தலைப்பே பெண் களை சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதாகும். அந்த கட்டுரையில் ஓ.ராஜகோபால் கூறியிருப்பதாவது:

சபரிமலையில் வழிபாடு நடத்த பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தி யுள்ள கட்டுப்பாடுகள் விலக்கப்பட வேண்டி யவை என நான் நம்புகிறேன். சமூகத்தில் பெண்களுக்கு ஆண் களைப் போலவே அனைத்து இடங்களிலும் வாய்ப்பு அளிக்கப்படும் இந்த காலக் கட்டத்தில் இந்த தேவைக்கு ஒரு சிறப்புத் தொடர்பு உள்ளது. ஆனால், எனக்கு புரியாத ஒருவிஷயம், எதற்காக அய்யப்ப பக்தைகளான சகோதரிகளை அய்யப்ப சன்னதியிலிருந்து விலக்கி வைக்கிறார்கள் என்பது. காட்டு விலங்குகள் நிறைந்த -அவற்றின் வசிப்பிடமான வனமாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுப் பாடுகளுக்கு இன்று எந்த அளவுக்கு பொருத்தப்பாடு உள்ளதென சம்பந் தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். கூட்ட நெரிசல்தான் பெண்களை விலக்கி வைக்க காரணம் என்றால், பெண்களுக்கு தனியாக செல்லவும் வழிபடவும் தேவையான வசதிகளை அல்லவா செய்ய வேண்டும்? கட்டுப் பாடுகள் உருவாக்குவதும் ஆனால் அதை மீறி செல்வதை தடுக்க முடி யாமல் இருப்பதுமான இப்போதைய நிலைக்கு பதிலாக, பெண்கள் வழிபட மிகச்சரியான, சாத்தியமான ஒரு ஏற்பாடு செய்திட வேண்டும். ஆன்மிக செயல்பாடுகளில் பெண் கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதில் யாருக்கும் சந்தேக மில்லை. இந்தியாவில் இன்று உயி ரோடு இருக்கும் ஆன்மிக குருக்களில் எல்லா வகையிலும் சிறப்பான இடத்தை அலங்கரிப்பவர் கேரளப் பெண்ணான சத்குரு மாதா அமிர் தானந்தமயி தேவி ஆவார். நேற்று வரை கோயில்களில் பூசாரிகளாக இருந்த பெண்களை ஏற்காமல் போயிருந்தாலும் இன்று நிலைமை மாறியிருக்கிறது. அம்மாவின் தலைமையிலும், உத்தரவின்படியும் பெண்களே பூசாரிகளாக இப்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பக்தர்கள் அதை அங்கீகரிக்கவும் செய்துள்ள னர். இந்த சூழ்நிலையில் சபரிமலை யில் வழிபாடு நடத்த பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை அகற்ற வேண்டும் என நான் கருதுகிறேன் இவ்வாறு ஓ.ராஜகோபால் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவு வருகிற வரை மட்டுமல்ல; அதற்கு சற்று பின்னாலும்கூட சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என கூறி வந்தவர்கள் ஆர்எஸ்எஸ்- -பாஜக தலை வர்கள். ஆனால், கேரள இடது ஜன நாயக முன்னணி அரசுக்கு எதிராக, இந்தப் பிரச் சினையை தடம் மாற்றி, மத ரீதியாக மக்களை அணிதிரட்டி அரசியல் லாபம் பார்த்துவிடலாம் என்ற குறுகிய, நயவஞ்சக நோக்கமே அவர் களது இப்போதைய நிலைப்பாடு என்பதுமேலும் வெளிப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner