எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் தொடங்கிய அறக்கட்டளை 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்'. இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது சென்னை புத்தகச் சங்கமம். 'உலகப் புத்தக நாள் பெருவிழா'வையொட்டி சென்னை, பெரியார் திடலில் 20-04-2018 முதல் 25-04-2018 வரை நடக்கின்ற புத்தகக் காட்சி இது!

"ஏப்ரல் 23ஆம் தேதி ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பிய ரின் நினைவு நாள். இந்நாளைத்தான் உலகப் புத்தக நாளாக அறிவித்தது யுனெஸ்கோ நிறுவனம். இந்நாளுக்கு சிறப்பூட்டும் வகையில்தான் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக இப் புத்தகக் காட்சியை நடத்துகிறது. ஆரம்பத்தில் பத்து விழுக்காடு கழிவில் நூல்கள் விற்கப்பட்டன. இப்போ அய்ம்பது விழுக்காடு தள்ளுபடியில் கிடைக்கிறது. 500 ரூபாய் புத்தகம் ரூபாய் 250-க்குக் கிடைக்கிறது. 58 பதிப்பகங்கள் இப்போது கடை போட்டிருக்கின்றன. இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் குறையாத புத்தகப் பிரியர்களை எதிர்பார்க்கிறோம்'' மகிழ்ச்சியோடு சொன்னார் திராவிடர் கழக மாணவரணிச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார்.

பெரியார் பிரச்சார அறக்கட்டளை கொண்டு வந்திருக்கும் 'புத்தக வங்கித் திட்டத்திற்கு ' நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது.

புத்தக ஆர்வலர்கள் வாங்கிப் படித்துவிட்டு, பரண் மேல் போட்டு வைத்திருக்கும் பழைய புத்தகங் களை, கேட்டு வாங்கி, கிராமப்புற பள்ளி நூலகங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் இது. இதுவரை அரை லட்சம் நூல்களை இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பள்ளிகளின் நூலகங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக் கிறார்கள். இந்தத் திட்டத்திற்காக சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய நூல்களை சீதை பதிப்பகம் கொடுத்ததாம். சென்னை புத்தக சங்கமத்தின் புத்தகர் விருதினை இதுவரை புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, பழங்காசு சீனிவாசன், பொள்ளாச்சி நசன் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புத்தகர் விருது களை பூம்புகார் பதிப்பகம் பிரதாப்சிங், பேராசிரியர் வீ.அரசு, வேலூர் லிங்கம் ஆகியோர் பெறுகிறார்கள்.

ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்தரத் தக்க வகையில் நூல்களைச் சேகரித்து பாதுகாப் போருக்கான விருதுகளை, உலகப் புத்தக நாளான 23-04-2018 அன்று மாலை 5 மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்,

தினமும் மாலையில் விமர்சன அரங்கம், இளைஞர்கள் வாசிப்பு, 'நான் ஏன் வாசிக்கிறேன்' போன்ற தலைப்புகளில் பொழிவுகளும் நடக்கின்றன.

20-04-2018 அன்று சென்னைப் புத்தக சங்கமத்தின் விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசிய இயக்கு நர் பாரதிராஜா, "போதிய பள்ளிக் கல்வியறிவில்லாத நான், இந்தப் புத்தகக் காட்சியை திறந்து வைத்து நூல்களை யெல்லாம் பார்க்கின்றபோது, மீண்டும் இந்த மண்ணில் போராட்டங்கள் நடத்துவதற்காக இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆசை தோன்றுகிறது. புத்தகம் என்பது அறிவாயுதம்; அதை வாசிப்பதை எப்போதும் நிறுத்தி விடக்கூடாது"  அறிவுப் பசியோடு, உணர்ச்சி மேலிடச் சொன்னார் புத்தகத்தை ஆயுதமாக உணர்த்தியபடி .

- கீரன்

நன்றி: 'நக்கீரன்' ஏப்.23-25 2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner