எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காக ஆண்டுதோறும் (அக்.10ஆம் தேதி) இன்று உலக மனநல தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எந்த நோயாக இருந்தாலும், அந்நோயினால் பாதிக்கப்பட்டால் இந்த நோய் நமக்கு வந்திருக்கிறது. அதை மருத்துவத்தின் மூலம் போக்கிக் கொள்ளலாம் என்று நோயாளிகள் அறிந்துகொள்ளலாம். ஆனால் இந்த மனநோய் என்பது தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதைக்கூட உணர்ந்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகக் கொடுமையான ஒரு நோயாகும்.

"பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியா ளர்கள், தாங்கள் பணியாற்றும் இடங்களில் எந்த அளவுக்கு மனநலம் பாதிக்கப்படுகிறது என்பதையும் அதற்கான காரணி களையும் ஆராய்ந்து அவற்றை சரி செய்வதன் மூலம் பணியாளர்களின் மனநலத்தை மேம்படுத்த முடியும். இதன் மூலம் அப்பணியாளர்களின் பணித்திறன் கூடி, ஒட்டுமொத்த சமூகமும், நாடும் முன்னேறும்" என்கிறது உலக சுகாதார நிறுவனம்.ஆனால் உடல்நலக் குறைபாடுகளுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக ஏற்கும் மக்கள், மனநலக் குறைபாடுகளை 'விதி' என நம்புகிறார்கள். இந்த மூடநம்பிக்கைகள் கிராமப்புறங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மனநலக் குறைபாடுள்ளவர்கள் மனநலப் பிரச்சினைகளுக்காக சாமியார்களையும், மந்திர வாதிகளையும், ஜோதிடர்களையும் நாடும் வழக்கம்தான் நீடித்து வருகிறது என்பது வேதனைக்குரிய செய்தி.

அத்துடன் மனநலக் குறைபாடுகளுக்கு வெளிப்படையாக மருத்துவர்களை அணுகுவது இன்னும் சங்கடமாகவே உணரப்படுகிறது. இந்தியாவில் நிலவும் மனநலப் பிரச்சினைகளின் அடிப்படையில் 11 ஆயிரத்து 500 மன நலமருத்துவர்கள் தேவை. ஆனால் வெறுமனே 3000 மனநல மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். இந்தியா முழுவதும் மனநல குறைபாடு களுக்கென்றே சிகிச்சை தர பிரத்யேகமாக 43 அரசு மனநல மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அத்துடன் 400 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநலச் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கே 7 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சைகள் எடுத்துக் கொள்கின்றனர். ஒரு லட்சம் மன நோயாளிகளுக்கு 0.3 மனநல மருத்துவர்கள், 0.17 மருத்துவத்தாதிகள் 0.05 உளவியல் நிபுணர் களே உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தப் புள்ளி விவரங்கள் நமது மக்கள் நலம் பேணும் (கீமீறீயீணீக்ஷீமீ ஷீயீ tலீமீ ஷிtணீtமீ) அரசுகள் எந்த நிலையில் உள்ள என்பதை மேற்கண்டப் புள்ளிவிவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த உலக மனநல தினத்தில் (அக்.10) இன்று நினைத்துப் பார்த்துப் பாராட்டப்பட வேண்டிய செய்தி: இந்தியா வின் நாக்பூர் நகரத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மூளை, மனநலம் தொடர்பான முதல் அருங்காட்சியகத்தை மனநல மருத்துவர் அவிநாஷ்ஜோஷி எனும் மனிதநேய மாண்பாளர் உருவாக்கியுள்ளார்.   மூளை, மனநலக் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளையும் மனநல மருத்து வத்தின் பல்வேறு அம்சங்களையும் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

மனநலக் குறைபாடு, மனநலச் சிகிச்சைகளின் உலகளாவிய வரலாறு ஆகியவை இங்கே சுவரொட்டிகளாகவும், ஓவியங் களாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மனநலக் குறை பாட்டின் வகைகள், சிகிச்சைகள் பற்றிய விவரங்களும் இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை தொடங்கிக் குழந்தைகள் உளவியல் வரை இந்த அருங்காட்சியகத்துக்கு வருபவர்கள் தெரிந்துகொள்ள இயலும்.

ஒவ்வொரு சுவரொட்டியிலும் ஒரு பள்ளிச் சிறுவனும்கூட புரிந்து கொள்ளும் அளவில் இந்தி மொழியில் (நம் தாய்மொழி தமிழிலும் வரவேண்டும்) விவரங்கள் தரப்பட்டுள்ளனவாம். இந்த அருங் காட்சியகத்துக்காக 5 லட்சம் ரூபாய் வரை செல வழித்துள்ளாராம். மூளையின் செயல்பாடு, நரம்பியல் செயல் முறைகளைக் குடிநோய், மனநிலை மாறுபாடுகளின் பின்னணியில் புரிந்து கொள்வதற்கான தகவல்களை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. காளை, நாய், ஆட்டின் மூளைகளும் இங்குப் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளன. மனித மூளையுடன் ஒப் பிடுவதற்கு இவை உதவியாக உள்ளன. இந்த அருங்காட்சி யகத்துக்கு வரும் பார்வையாளர்கள், தங்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினை இருப்பதை உணர்ந்தாலோ ஆலோசிக்க விரும்பினாலோ இங் குள்ள பெட்டியில் தங்கள் கருத்துகளையும், பிரச்சினைகளையும் எழுதிப் போடலாம்.  நம்மால் முடிந்த அளவு  மனித சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் தொண்டு செய்து வாடிநந்து சிறக்க வேண்டும் என்பதே இந்நாளில் நமது சிந்தனை.

இராமசாமி மாதவன் (கீழ்வேளூர்)



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#1 s.sinthan 2017-10-10 17:22
மனித சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் தொண்டு செய்து வாழ்ந்து சிறக்க வேண்டும் என்பதே இந்நாளில் நமது சிந்தனை.

அருமையான பயனுள்ள தகவல் உம் சிந்தனை எங்களை சிலிர்க்க வைக்கிறது !
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner