எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசுக்கு 'இந்து' என்.ராம் பதிலடி

சென்னை, மார்ச் 8  ரபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை எப்படிப் பெற் றோம் என்கிற விவரங்களை வெளிப்படுத்திட மாட்டோம் என்று தி இந்து' குழுமத்தின் தலைவரான என்.ராம் கூறினார்.

ரபேல் ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுவருகையில் அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக் குரைஞர், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் அமைச்சகத்திலிருந்து திருடப் பட்டிருக்கின் றன என்றும், அவற்றை வெளி யிட்டவர்கள் அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின் படி குற்றவாளிகள் என்றும் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் என்.ராம், கூறியிருப்ப தாவது:

பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து இந்த ஆவணங்களை நாங்கள் திருடவில்லை. இவற்றை மிகவும் ரகசிய வட்டாரங்களிலிருந்து பெற்றோம். இந்த ஆவணங் களை எப்படிப் பெற்றோம் என்பதை நானோ அல்லது வேறெவருமோ வெளிப்படுத்திட மாட்டோம். ஏனெனில் இந்த ஆவணங்களை எங்களிடம் கொடுத்தவர்களுக்கு அவ்வாறு வெளிப் படுத்திட மாட்டோம் என்று வாக்குகொடுத்திருக்கிறோம்.இரண்டாவதாக, பொதுநலன்கருதி புலனாய்வு இதழியல் மூலமாக இந்தத் தகவல்களை நாங் கள் வெளியிட்டிருக்கிறோம். இதுதொடர்பான முக்கியமான தகவல் கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல முறை கோரப்பட்டபோதிலும் அவற்றை அரசாங்கம் வெளியிடாமல் மறைத்து வைத்தது. மூன்றாவதாக, இப்போது இந்த ஆவணங்கள் அரசாங்கத்திடமிருந்து திருடப் பட்டதாக அரசே கூறுவதிலிருந்து, இதில் கண்டுள்ள விவரங்கள் உண்மையானவை என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டது போலாகிறது. எவ்வாறு இந்த ஆவணங் களைப் பெற்றீர்கள் என்று இந்தபூமியில் எவரும் எங்களைக் கட்டாயப்படுத்த முடி யாது. நாங்கள் அரசமைப்புச்சட்டத்தின் 19(1)ஆவதுபிரிவின்கீழும், பேச்சுரிமை என்னும் அடிப்படை உரிமையின் கீழும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். தகவல் அறியும் உரிமையின் கீழும், அதிலும் குறிப்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)(1) மற்றும் 8(2) ஆகிய பிரிவுகள் அரசாங்க ரகசியங்கள் சட்டத்தையே ஒதுக்கித் தள்ளுகின்றன. தேசப் பாதுகாப்பு நலன் என்பது எதனுடனும்சமரசம் செய்து கொள்ள முடியாது என்று அவை தெரிவிக்கின்றன.

1923ஆம் ஆண்டு அரசாங்க ரகசியங்கள் சட்டம் என்பது ஜனநாயக இந்தியாவில் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இச்சட்டமானது பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அருவருப்பான சட்டம். இது ஜனநாயக விரோதமான ஒன்று. சுதந்திர இந்தியாவில் மிகவும் அரிதாகத்தான் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிக் கொண ரப்பட்டுள்ள விவரங்கள் வேவுபார்த்தல் அல்லது அதுபோன்ற வேறாதாகிலுமாயின் அது வேறு விஷயம்.ஆனால் நாங்கள் வெளியிட்டிருக்கும் விவரங்கள் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை. மக்கள் தெரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் தாராளமாகக் கிடைக்க வேண்டியவைகளாகும்.

இவ்வாறு என்.ராம் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner