எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி அரசுமீது அகிலேஷ் தாக்கு

லக்னோ, பிப். 22- இந்திய நாட்டிற்கு புல்லட் ரயிலைக்காட்டிலும், எல்லை யில் காவல் காக்கும்பணியில் இருக் கும் ராணுவ வீரர் களுக்கு புல்லட் துளைக்காத ஆடைகள்தான் முக்கியம் என்று, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலை வருமான அகிலேஷ் கூறியுள்ளார்.

லக்னோவில் திங்களன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியி லேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, பாதுகாப்பு அமைப்புகள் தோல்வி அடைந்ததே காரணம் என்று கூறியுள்ள அகி லேஷ், இதற்கு மத்திய அரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது; உள வுத்துறையின் தகவல்களை ஒருங்கி ணைக்க அரசால் ஏன் முடியவில்லை? என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்ட நிலையில், ஆளும் பாஜக மட்டும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: பாஜக-வை ஆட்சியில் இருந்து அகற் றுவதுதான் எனது முக்கியமான குறிக்கோள். அதனாலேயே பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத் தேன்.கூட்டணிக்கு மாயாவதி எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. நானும் நிபந் தனை விதிக்கவில்லை. அரசியல் ராஜதந்திரங்களை, பாஜகவி டமிருந்தே நான் கற்றுக்கொண்டேன். அந்த தந்திரங்களை இப்போது பாஜக-வுக்கு எதிராக பயன்படுத்துகிறேன். பாஜக-வுக்கு எதிரான அனைத்துக் கட்சி களையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய கூட்டணியை காங்கிரஸ் ஏற் படுத்தியிருக்க வேண்டும். 5 மாநிலத் தேர்தலின்போதே காங்கிரஸ் இதைச் செய்திருக்க வேண்டும்.

ஆனால், தவறவிட்டு விட்டது. இன்றைய சூழ லில் உ.பி.யில் காங்கிரசுடன் நாங்கள் உடன்பாடு காண்பது சாத்தியமில்லா தது. பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தைப் பொறுத்தவரை, இப் போதே கணிக்க முடியாது. எனினும், உத்தரப்பிரதேச வாக்காளர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.இவ்வாறு அகி லேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner