எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.22 ''அரசியல் லாபத்துக்காக, ராணுவத்தை பயன்படுத்துவது, தேசிய பாது காப்புக்கு ஆபத்தை விளை விக்கும். இதுபோன்ற செயல் களை அனுமதிக்க முடியாது,'' என, ஆந்திர முதல்வர், சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்கு தலில், 40 வீரர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு, நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம் பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கட்சி நிர் வாகிகள் கூட்டத்தில் பேசிய தாவது: பயங்கரவாத தாக்குதல் களுக்கு எதிராக, நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண் டும். எல்லைகளில், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண் டும். ஆனால், மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, சந்தேகம் எழுப்பி உள்ளார். அவரது கேள்வி குறித்து, நாடு முழுவதும் விவாதங்கள் நடக்கின்றன.

மக்கள் மீதான நம்பிக் கையை, பா.ஜ.க., இழந்து விட்டது. அதனால் தான் அவர்கள், சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளனர். அரசியல் லாபங்களுக்காகவும், சுயநலத்துக்காகவும், ராணுவம் பயன்படுத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் திறமையின் மையால், தேசிய பாதுகாப் புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை பார்த்து, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner