எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, பிப்.21 -கடந்த   2014   நாடாளுமன்றத் தேர்தலின்போது,  தனியார்  செய்தி ஊடகங் களைத்  தாண்டி,  ட்விட்டர், முகநூல்   உள் ளிட்ட   சமூக   ஊடகங்களையும் மிகப் பெரிய ஆயுதமாக பா.ஜ.க.  பயன்படுத்தியது.

ஆனால்,  பா.ஜ.க.  கையிலெடுத்த இந்த  ஆயுதங்களே,  2019  நாடாளுமன்றத்  தேர்தலில்,  பா.ஜ.க.-வுக்கே எதிராக   திரும்பிக்   கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 2014-இல் மோடியைத் தாங்கிப்  பிடித்த,  ட்விட்டர்  வாசிகள், தற்போது  மோடி  என்றாலே,  கடுமையாக விமர்சிக்கின்றனர். கறுப்புப் பணஒழிப்பு,  தீவிரவாத  ஒழிப்பு,  2  கோடி பேருக்கு,  வங்கிக்  கணக்கில்  ரூ.15 லட்சம்  வாக்குறுதி  ஆகியவற்றை நினைவுபடுத்தி,    மீம்ஸ்    போட்டு கிண்டலடித்து  வருகின் றனர்.

மோடி  செல்லும்  மாநிலங்களில், கோ  பேக்  மோடி' என்ற  ஹேஷ்டேக், உலக  அளவில்  டிரெண்ட்  ஆவதிலிருந்தே, சமூக ஊடகங்களில் மோடிக்கு இருக்கும்  எதிர்ப் பைப்  புரிந்து  கொள்ளலாம்.மேலும்,  டுவிட்டரில்  மோடியைப்பின் தொடர்ந்த  பல  லட்சம்  பேர்,  தற்போது  அவரை  விட்டு  விலகியுள்ளனர். இந்நிலையில்,  மோடிக்கு  இருக்கும்  செல்வாக்கை  சோதித்துப்  பார்க்கும்  வகை யில்,  டைம்ஸ்  நவ்,  ரிபப்ளிக்  டிவி'  ஆகிய  பா.ஜ.க.  ஆதரவு ஊடகங்களே  டுவிட்டரில்  கருத்துக்கணிப்புக்களை  அண்மையில்  நடத்தின.

ஆனால்,  அவற் றிலும்  மோடி கடுமையாக  அடி வாங்கியிருக்கிறார். பா.ஜ.க. ஆதரவு  தொலைக் காட்சியான  டைம்ஸ்  நவ்',  ட்விட்டரில் மோடி  குறித்து  ஒரு  வாக்கெடுப்பை நடத் தியுள்ளது. அதாவது, மோடியின் 5  ஆண்டு  ஆட்சியில்  நீங்கள்  பயனடைந்தீர்களா?  என்று  அது  வாசகர்களிடம்   கேள்வி   எழுப்பியுள்ளது. அதற்கு,   85   சதவிகித   டுவிட்டர் வாசிகள், இல்லை''  என்றே  வாக்களித்துள்ளனர்.

அதேபோல  மோடியை, பிரியங்கா  காந்தியால்  எதிர்கொள்ளமுடியுமா?  என்று  கேட்கப்பட்ட  கேள்விக்கும், 60 சதவிகிதம் பேர் முடியும்'' என்று வாக்களித்து, அதிர்ச்சி அளித்துள்ளனர்.மற்றொரு  பா.ஜ.க. ஆதரவு ஊடகமாக,  அர்னாப்  கோஸ் வாமியின்,   ரிபப்ளிக்   டிவி'-யும்,   55 ஆண்டு  காங்கிரஸ்  ஆட்சியை  விட, 55  மாதம்  ஆட்சி  செய்த  மோடி  மக்களுக்கு  அதிகம்  செய்துவிட்டாரா? என்று டுவிட்டரில் கேட்டுள்ளது. இதற்கும்  56  சதவித  டுவிட்டர் வாசிகள் இல்லை'' என்றே கூறியுள்ளனர்.

இவ்விரு  தனியார்  செய்தி  ஊடகங் களைத்  தவிர,    பா.ஜ.க.  ஆதரவாளரும்  திரைப்பட  இயக்குநருமான அக்னிஹோத் ரியும், டுவிட்டரில் தன்னைப் பின்பற்றக் கூடிய ஒரு லட்சத்து 40 ஆயிரம்   பேரிடம்   ஒரு   கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளார். நரேந்திரமோடிக்கும்,   ராகுல்   காந்திக்கும் விவாதம்    நடந்தால்,    ராகுலுக்கு எவ்வ ளவு  மதிப்பெண்  தருவீர்கள்?'' என்பதுதான்     அவர்     கேட்டிருந்ததாகும்.  அதற்கு  ராகு லுக்கு  100 மதிப்பெண்கள்  தருவோம்  என்று  56 சதவிகிதம்  வாக்களித்து,  அக்னி ஹோத்ரிக்கே    அதிர்ச்சி    அளித்துள்ளனர்.

பா.ஜ.க.-வினர் நடத்திய கருத்துக் கணிப் புகளிலேயே,    பா.ஜ.க.  மற்றும் பிரதமர்  மோடியின்  தோல்வி  உறுதிப்படுத்தப்பட்டு  இருக்கிறது. சமூக வலைத்தளங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட  மோடி  பிம்பம்,  அதே சமூக வலைத்தளங்கள்     மூலமாக உடைந்து  நொறுங்குவதைக்  கண்டு, பா.ஜ.க.-வினர்  கலக்கம்  அடைந்துள்ளனர். புல்வாமா தாக்குதல்சம்பவத்தைப்  பயன் படுத்தி,  மோடி  செல்வாக்கை  உயர்த் தும்  வேலையில், பா.ஜ.க.-வினர்  தீவிரம்  காட்டுவதும் இந்த அடிப்படையில்தான். எனினும், புல்வாமா  சம்பவத்தில்  முன் னுக்கு வரும்  கேள்விகள்,    பா.ஜ.க.-விற்கு எதிராகவே திரும்பும் வாய்ப்புள்ளதாக அரசியல்  நோக்கர்கள்  கருதுகின்றனர். 2019 தேர்தலில்  பா.ஜ.க. தோல்வியை  தடுக்க  முடியாது  என்றும் அவர்கள்  தெரிவிக் கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner