எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெலகாவி, பிப். 7 கருநாடக மாநிலத்தில் பெலகாவி பகுதியில் பிறந்த நாள்விழா வில் வீச்சரிவாளால் கேக் வெட்டிக் கொண் டாடிய பாஜக பொறுப் பாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் இளைஞர் அமைப்பின் பொறுப்பாளரும் ரியல் எஸ்டேட் வணி கத்தில் ஈடுபட்டு வருபவருமாகிய நிகில் மூர்குடே (வயது 30) என்பவர் தனியார் விடுதியில் பிறந்த நாளைக் கொண்டாடி யுள்ளார். பெலகாவி  பாஜக சட்டமன்ற உறுப்பினர் அனில் பெனாகே, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பாடீல் உள்ளிட்ட பலரும் அக்கட்சி யின் சார்பில் கலந்து கொண் டனர்.

பிறந்த நாள்விழாவில் நிகில் மூர்குடே வீச்சரிவாளால் கேக் வெட்டியுள்ளார். அந்த படம் மற்றும் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டது. வீரமான நிகிலுக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று குறிப்பிட்டு அவர்கட்சியினரால் பகிரப்பட்டது. கரு நாடக மாநில காவல் துறையின் ரவுடிகள் பட்டியலில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சி யாக நிகில் மூர்குடே பெயர் இடம்பெற்று வந்துள் ளது. கொலை முயற்சி வழக்குகள், கல வரம் செய்தது, தாக்குதல் நடத்தியது உள் ளிட்ட பல் வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினத்தவர் மீதான வன்கொடுமைத் தடுப் புச் சட்டத்தின்கீழும் வழக்கு நிலு வையில் உள்ளது.

பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தின் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பர வியதைத் தொடர்ந்து, கருநாடக மாநில காவல்துறை அலுவலர் பி.ஆர்.கட்டேகர் தலைமையிலான குழு பாஜக இளைஞர் பிரிவு பொறுப்பாளரான நிகில் மூர்குடே வைக் கைது செய்தது. பயங்கர ஆயுதத்தை சட்ட விரோதமாக வைத்திருந்தது மற்றும் கொலை முயற்சி  வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிகில் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தக வலை கருநாடக மாநில காவல் துறை உதவி ஆணையர் நாரா யண் பாராமணி குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner