எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன. 18- சி.பி.அய்., சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ் தானாவும், பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சி.பி.அய்., இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து, இருவரது பொறுப்புகளையும் பறித்து, அவர்களை கட்டாய விடுமுறையில், மத்திய அரசு அனுப்பியது.

நாகேஸ்வர ராவ், தற்காலிக இயக்குநராக நியமிக்கப் பட்டார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அலோக் வர்மா, தொடர்ந்து பணியாற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது. ஆனாலும், பிரதமர் மோடி அடங்கிய உயர் நிலைக்குழு ஆலோசனை நடத்தி, சி.பி.அய்., இயக்குநர் பொறுப்பில் இருந்து, அலோக் வர்மாவை நீக்கியது.

அவர், தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார்; இதை ஏற்காத அலோக் வர்மா, பதவியிலிருந்து விலகினார். நாகேஸ் வர ராவ், தற்காலிக இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

சி.பி.அய்.,யின் புதிய இயக்குநரைத் தேர்வு செய்ய, பிர தமர் மோடி, மக்களவை காங்கிரசு கட்சித் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழு வரும் 24இல் கூடுவதாக உள்ளது. இந்நிலையில், சி.பி.அய்., சிறப்பு இயக்குநர் அஸ்தா னாவும், அந்த பதவியி லிலிருந்து, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப் பட்டவரிடமிருந்து கையூட்டு வாங்கியதாக அஸ்தானா மீது சி.பி.அய்., ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது.

அஸ்தானாவுடன், கூடுதல் இயக்குநர் அருண் குமார் சர்மா, டி.அய்.ஜி., மணிஷ் குமார் சின்ஹா, கண்காணிப்பாளர், ஜெயந்த் ஆகியோரும், சி.பி.அய்.யில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். தற்பொழுது மத்திய அரசால் அஸ்தானா விமான போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

ஜோதிடனா? நாயா?

சென்னை, ஜன. 18- ஆவடி எச்விஎப் தொழிற் சாலை அருகே உள்ள நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் அருண் பாண்டியன். ஊசி, பாசி மணி வியாபாரம் செய்பவர். இவரது மனைவி ரோஜா (25). இவர்களது மகள் சுஜாதா(3). கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருண்பாண்டியன் வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். ரோஜாவும், சுஜாதாவும் வீட்டில் இருந்தனர். நேற்று முன்தினம் வீட்டுக்குள் ரோஜாவும், சுஜாதாவும் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

காவல்துறையினர் விசாரணையில், அதே பகுதியில் தங்கியிருந்த காட்பாடியைச் சேர்ந்த கைரேகை ஜோதிடன் வீரக் குமார் (22) என்பவர் இக்கொலையை செய்தது தெரிய வந்தது. காவல்துறையினர் வீரக்குமாரை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:

எங்கள் விசாரணையில் வீரக்குமாரை இரவில் ரோஜா வீட்டருகே பார்த்ததாக சிலர் கூறினர். சந்தேகத்தின்பேரில் அவரையும், மேலும் 4 பேரையும் பிடித்து விசாரித்தோம்.

இந்த நேரத்தில் காவல்துறை மோப்ப நாய் ஜான்சியை, சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து சோதனை செய்தோம். வீட்டுக்குள் சிறிது நேரம் மோப்பம் பிடித்த ஜான்சி, அதே பகுதியில் வீரக்குமார் தங்கி இருந்த வீட்டை சிறிது நேரம் சுற்றி வந்தது. பின்னர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆவடி காவல் நிலையத்தை நோக்கி வேகமாக ஓடியது. இங்கே எதற்கு செல்கிறது என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது.

காவல் நிலையத்துக்குள் புகுந்த ஜான்சி, நேராக சென்று வீரக்குமாரின் கையை கடுமையாக கடித்து இழுக்க ஆரம்பித் தது. அதன்பின்னரே தீவிர விசாரணை நடத்தியதில் வீரக் குமார், கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். ஜான்சி கடித்ததில் ஏற்பட்ட காயத்துக்காக அவருக்கு மருந்து கொடுத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner