எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- அகிலேஷ் -

லக்னோ, ஜன.17 உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட் டணியை அறிவித்ததை அடுத்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் கூட்டணியால் பாஜகவின் தலைமை முதல் தொண்டர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமே தோல்வி பயம் வந்துவிட்டது. சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ள கருத்தே அவரது அச்சத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. எங்கள் கூட்டணியிடம் இடைத்தேர்தல்களில் அடைந்த தோல்வியை பாஜக மறந்திருக்காது. பாஜக தொண்டர்கள் கலக்கத்தில் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவர்கள், எங்கள் கூட்டணிக்கு வந்துவிடலாமா? என்றுதான் யோசித்து வருகின்றனர். பாஜகவின் அடக்கு முறைகளுக்கும், நேர்மையற்ற செயல்பாடுகளுக்கும் வரும் மக்களவைத் தேர்தலுடன் முடிவு கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner