எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆளுநரிடம் கேரள முதல்வர் விரிவான அறிக்கை

திருவனந்தபுரம், ஜன.12 உச்சநீதிமன்றத் தின் அரசியல் சாசனஅமர்வு பிறப்பித்த உத்தரவின்படி இளம்பெண்கள் சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பு பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக கேரளா முழு வதும் ஆர்.எஸ்.எஸ்., -பாஜக காவிக்கும்பல் அமைப்புகளின் தலைமையில் நடந்த அட் டூழியங்கள் குறித்த விரிவான அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் பி.சதாசிவத்திடம் 10.1.2019 அன்று இரவு ஒப்படைத்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது முதல் மாநிலத்தில் திட்டமிட்ட தொடர்வன் முறைகள் நடந்தன. அதுகுறித்தும், சபரி மலையில் புனிதப்பயண காலங்களில் நடை திறந்தபோது நிலைக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் சங்பரி வார் அமைப்புகள் நடத்திய அட்டூழியங்கள் குறித்தும், பக்தர்களான பெண்களுக்கு எதிராக நடந்த அராஜகங்கள் குறித்தும் விளக்கமான விவரங்கள் இந்த அறிக் கையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. நிலைக்கல்லிலும் பம்பையிலும் ஊடகத்தினர் எதிர்கொண்ட தாக்குதல் களும், காவல்துறையினருக்கு எதிராக நடந்த அவதூறுப் பிரச்சாரங்களும் அராஜ கங்களும் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

மாநிலத்தில் நடந்த முழு அடைப்பின் பெயரால் நடந்த தாக்குதல்களில் காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் கொடுங்காயங்கள் ஏற்பட்டன. கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள், அரசு அலுவ லகங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், கட்சித் தலைவர்கள் மற்றும்மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக காவல்துறையால் 1137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடையாளம் காணப்பட்ட 10ஆயிரத்து 24 நபர்களில் 9ஆயிரத்து 193 நபர்கள் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். மற்ற அமைப்புகளைச் சேர்ந்தோர் 831 பேர் புரட்டாசி மாத பூஜை, சித்திரை ஆட்ட சிறப்பு பூஜை, மண்டல-மகரவிளக்குஆகிய காலங்களில் சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண் களைத் தடுத்தது உள்ளிட்ட நடவடிக் கைகளில் மேற்படி காவிக் கும்பல்கள் ஈடுபட்டனர். அப்படித் தடுக்கப்பட்டவர் களில் 5 பேர் பிரபல பெண் பத்திரிகையா ளர்களாவர். இவ்வாறு தடுத்தது உச்சநீதி மன்ற உத்தரவு மீறலாகும். 28.09.2018இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தபிறகு தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக் களை ஜனவரி 22இல் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

அதற்கிடையே தீர்ப்புக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை என உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. அதன் அடிப்படையிலேயே வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் சபரிமலையில் தரிசித்தனர். இதையொட்டி பல்வேறு கால கட்டங்களில் சபரிமலையிலும் மற்ற இடங்களிலும் நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக 2012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங் களை பதிவு செய்ய வந்த 17 ஊடகத் தினருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக 7 காவல்நிலையங்களில் 15 நபர்களை காவல்துறையினர் கைது செய் தனர். வகுப்புவாத அணி திரட்டலுக்கான சதித்திட்டங்களும் இதில் உள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வன்முறைகளின் புகைப்படங்களும், மத மோதலைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளின் விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளும் ஆளுநரிடம் வழங்கப்பட்டன. இரண்டு பெண்கள் சபரிமலையில் நுழைந்ததற்கு எதிராக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் குறித்த விவ ரங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள் ளன. 03.01.2019 முழு அடைப்பின்போது மட்டும் ரூ.2.32 கோடி இழப்பு ஏற்பட்ட தாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner