எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராய்ப்பூர், ஜன. 12 -ஆந்திராவுக் குள், மாநில அரசின் அனுமதி யில்லாமல், மத்தியப் புலனாய்வுக் கழகத்தினர் நுழையக் கூடாது என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதேபோல் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் மாநில அரசின்அனுமதியின்றி சிபிஅய் சோதனை கூடாது என்றுஉத்தரவிட்டார். அந்த வரிசையில்,சத்தீஸ்கர்மாநில காங்கிரஸ் அரசும், சிபிஅய் நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. புதிய விவகாரங் களில் சிபிஅய் தனது அதிகார வரம்பை முன் அனுமதியின்றி சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் பயன்படுத்தக்கூடாது என்று உள்துறை அமைச்சகத்திற்கு முதல்வர் பூபேஷ் பாகல் கடி தமும் அனுப்பியுள்ளார்.

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner