எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமியர்க்கு எதிராக தீர்ப்பு வழங்கச் சொல்லி குஜராத் அரசு மிரட்டியது!

முன்னாள் நீதிபதி ஹிமான்சூ திரிவேதி பகிரங்க குற்றச்சாட்டு!

அகமதாபாத், நவ.25 -இசுலாமியர்க்கு எதிரான தீர்ப்புகளை வழங்குமாறு, குஜராத் மாநில பாஜக அரசு நீதிபதிகளை மிரட்டியதாக, முன்னாள் நீதிபதி ஹிமான்சூ திரிவேதி பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். பாஜக அரசின் மிரட்டலுக்குப் பணிந்து போக விருப்பம் இல்லாததால், நீதிபதி பதவியை விட்டே தான் விலகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, இசுலாமியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கோத்ரா ரயில்எரிப்பைக் காட்டி நடத்தப்பட்ட இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான முசுலிம்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வெட்டி வீசப்பட்டனர். உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

கர்ப்பிணிப் பெண்ணையும் அவரின் சிசு வையும் கூட இந்துத்துவா கும்பல் விட்டு வைக்க வில்லை. இந்தக் கொலை வெறியாட்டத்தை, வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்களில் முக் கியமானவர் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத். அவருடைய துணிச்சலான தலை யீடு காரணமாகவே, அன்றைய முதல்வர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி, பாஜக-வைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. குஜராத்தில் தொடர்ந்து தங்களிடம்இருக்கும் அதிகாரத்தைப் பயன் படுத்தி, சட்டத்தையும் நீதியையும் வளைத்துப் பித்துக் கொண்டனர். 2014- ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனதும், சமூக செயற்பாட்டாளரான டீஸ்டா செதல்வாத்தை பழிவாங்கும் நடவடிக் கைகள் துவங்கின. அவர் மீது பொய்வழக்குகள் தொடரப்பட்டன. அவரது நிறுவனம் மற்றும் இல்லத்தில் சிபிஅய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

தற்போது டீஸ்டா செதல்வாத் தேச விரோத செயல்களை செய்வதாக குஜராத் உயர்நீதிமன் றத்தில் சில கடிதங்களை சிபிஅய்-யும் குஜராத் காவல்துறையும் தாக்கல் செய்துள்ளன. இதற்குச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. செதல்வாட்டை பழிவாங்கும் திட்டமிட்ட நடவடிக்கைகளே இவை என்று அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டித்துள்ளனர். அந்த வகையில், அகமதாபாத் மாவட்ட சிவில் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹிமான்சூ திரிவேதியும், டீஸ்டா செதல்வாத் மீதான பழிவாங்கலைக் கண்டித்துள்ளார். மேலும், டீஸ்டா செதல்வாத் அவர்களுக்கு பாராட்டுக்கள்; நான் உங்களையும் உங்கள் துணிச்சலையும், ஒளிவுமறைவற்ற பேச்சுக்களை யும்மிகவும்விரும்புகிறேன்என்றுஆதரவுக் கரம் நீட்டியுள்ள திரிவேதி, குஜராத் வன்முறையின் போது, பாஜக அரசு நீதித்துறைக்கு அளித்த நெருக்கடிகளையும் விரிவாக முகநூலில் பதிவிட் டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் அகமதாபாத் மாவட்ட சிவில் நீதி மன்ற நீதிபதியாக இருந்தபோது, என் சக நீதிபதி திருமதி ஜ்யோத்ஸ்னா யக்னிக், வழக்கு ஒன்றில் பாஜக தொண்டர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருந்தார். அதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல்கள் இன்றும் தொடர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் மிகவும் துணிச்சல்மிக்க பெண்மணியாக இருந்தவர்தான் நீதிபதி ஜ்யோத்ஸ்னா. தற்போதோ அவர் பயத் துடன் வாழ்ந்து வருகிறார்.குஜராத் மாநில பாஜக அரசின், சிறுபான்மையினருக்கு எதிரான போக்கே இதற்கெல்லாம் காரணம். வழக்குகளில் இசுலாமியர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி யாக வேண்டும். இதற்கு நேரடி உத்தரவு எதை யும் குஜராத் அரசு பிறப்பித்தது இல்லை. ஆனால், பலமுறை மறைமுகமாக நிர்ப்பந்தம் அளித்திருக்கிறது. அதற்கு நான் அடிபணிந்து நடக்க விரும்பவில்லை. அதற்காக நான் எனது பதவியை விட்டு விலகினேன் என்று திரிவேதி கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner