எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிமன்றத்தில் கேரள அரசு

கொச்சி, நவ.25 சபரிமலையில் பிரச்சினை செய்தது குற்றவாளிகள்தான் எனவும், காவல் துறையினர் அல்ல எனவும்கேரள அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.சங்பரிவார் பின்னணி கொண்ட பெண் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த வழக் கில், அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை ஏற்காத பாஜக -சங்பரிவார் அமைப்பினர் இளம் பெண்களை சபரி மலையில் அனுமதிக்கக் கூடாது எனக்கூறி வன்முறை போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இத னால் சபரிமலை சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தடை உத்தரவு தொடர்பாக, நவம்பர் 21 ஆம் தேதி கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை அய்யப்பன் கோயில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது'' குறித்து விளக்கம் அளிக்குமாறு, கேரள அரசை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், இதுகுறித்து வெள்ளி யன்று (நவ. 23) கேரள உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலை யில் பிரச்சினை செய்தது கிரிமினல்கள் தான், காவல்துறையினர் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளது. பிரச்சினை ஏற் படுத்திய கிரிமினல்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பையில் வாகன நிறுத்தம் உள் ளிட்ட வசதி குறைவு காரணமாக நிலைக்கலில் முகாம் மாற்றப்பட்டது. இதற்கும்,உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எந்த தொடர்புமில்லை என விளக்கம் அளிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரி மலை கோவில், நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை, வருகிற 26 ஆம்தேதி வரை நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner