எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நூல் அறிமுகம்

பஹ்ரைன், நவ.9 பஹ்ரைனில் நடைபெற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பஹ்ரைன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை மாலை பஹ்ரைன் திமுக அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் சாமி அவர்களின் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் அதிகமாக உறுப்பினர்களை சேர்ப்பது பற்றியும், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதி வாரியாக சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களிடம் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ற அவசியத்தை உணர்த்தும் வகையிலும் பரப்புரைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசி முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புத்தகத்தை அவைத் தலைவர் ஆம்பல் குணசேகரன்  வெளியிட, லெனின் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், திருமேனி, சிங்கமுத்து, இஸ்மாயில், அசோக், செந்தில், சண்முகநாதன், சுல்தான் இப்ராஹீம். ஜோதிபாசு, சின்னசாமி, தினேஷ், ஷபீக் மற்றும் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நூலைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இந்த நூலை நூற்றுக்கணக்கில் வாங்கி இங்குள்ள தமிழர்களுக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner