எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனிதர்கள்மீது மாடுகளை ஓடவிடும் மூடத்தனம்: பலரும் படுகாயம்

போபால், நவ.9 பாஜகஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தீபாவளியின் தொடர்ச்சியாக பக்தி, சடங்குகளின் பெயரால் தரையில் படுக்கவைத்து மனிதர்களின்மீது மாடுகளை ஓடவைக்கின்ற  காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதனால் ஏராள மானவர்கள் படுகாயமடைந்தார்கள்.

மத்தியப்பிரதேசமாநிலத்தில் உஜ்ஜயினி,  ஜாபா பகுதிகளில் கிராமங்களில் கோவர்த் தன பூஜையின் ஒரு பகுதியாக தீபாவளிக்கு அடுத்த நாளில் காய் கவுரி என்கிற பெயரில் சடங்காக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மனிதர்கள்மீது மாடுகள் ஓடும்போது மாட்டின் சாணத்தைக் கொண்டு செய் யப்பட்ட கோவர்த்தன் கடவுளின் உரு வத்தை மாடுகள் மிதித்து உடைத்திட வேண்டும். அப்படி உருவ பொம்மை உடைக்கப்படாவிட்டால் அச்சடங்கு முடிந் ததாக கொள்ளமாட்டார்களாம். (நியூஸ் 18 இணையம், 20.10.2017)

மாடுகளை மனிதர்கள்மீது ஓடவைக் கின்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் தங்களின் தலையை போர்வையால் மூடிக் கொண்டு, தரையில் படுத்துக்கொள்கின்றனர். பின்னர் அவர்கள்மீது ஏராளமான கோயில் மாடுகள் ஒரேநேரத்தில் ஓட விடப்படுகின் றன.

மாடுகளின் கொம்புகளில் வண்ணங் களைப் பூசி, பூக்கள், பலூன்களைக் கட்டி விட்டு, இசைக்கருவிகளை இசைத்தபடி, பெருங்கூச்சலுடன் ஆட்டம் பாட்ட ஆர வாரத்துடன் மாடுகளை ஓடவிட்டனர். மிரட்சியில் ஓடுகின்ற மாடுகளால் மிதிபட்டு ஏராளமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.

ஆண்டுதோறும் தொடரும் மூடத்தனம்

கோவர்த்தனை வழிபட்டு வேண்டிக் கொண்டு, ஆண்டு முழுவதும் வேளாண் மைப்பணிகளில் கால்நடைகளை ஈடு படுத்துவதையடுத்து, கால்நடைகளிடம் மன்னிப்பைக் கோரவும் இதுபோல் தரையில் படுத்துக்கொண்டு மாடுகளால் மிதிபடுகின்றனர். மாடுகளால் மிதிபடும் போது காயமடைந்தால், மாட்டுச்சாணம், மாட்டின் மூத்திரத்தைக் காயங்களின்மீது தடவிக்கொள்கிறார்கள். (தி ஏசியன் ஏஜ் அக்டோபர் 2017)

மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்

இந்நிகழ்ச்சி மனித உரிமைகளுக்கு எதிரானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். நாகரிகம் உச்சத்தைத் தொட்டுள்ள இந்த காலகட்டத்திலும் இதுபோன்ற அர்த்தமற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படலாமா? இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner