எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, நவ. 8- கருநாடக இடைத்தேர்தலில் காங்கிரசு கூட்டணியின் வெற்றி குறித்து முன்னாள் முதல்- அமைச்சர் சித்த ராமையா பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தேர் தல் பிரச்சாரத்தின்போது, காங் கிரசு வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நான் கூறினேன். அதே போல் ஜம கண்டி தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று நான் சொன்னேன். ஏறக்குறைய அதே போல் எங்கள் கட்சி வேட்பா ளர்கள் அமோக வெற்றி பெற்று உள்ளனர்.

மக்களின் மனநிலையை நான் சரியாக கணித்துள்ளேன் என்பதில் பெருமை கொள்கி றேன். இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற நாடா ளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் மன நிலை பா.ஜனதாவுக்கு எதிராக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

காங்கிரசு -ஜனதா தளம்(எஸ்) புனிதமற்ற கூட்டணியை அமைத்துக் கொண்டதாக பா.னதா தொடர்ந்து கூறியது. நாடாளுமன்ற தேர்தலில் கருநாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், 20 தொகுதி களில் காங்கிரசு கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு சித் தராமையா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner