எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

பெங்களூரு, நவ. 8- அமலாக் கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதி பரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய கருநாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

கருநாடக மாநிலம் பெங் களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அக மது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்க ளுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடை யில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக் கும் பதிவானது. இந்த வழக் கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரி களின் விசாரணையிலிருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கருநாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி யின் உதவியை பரீத் நாடி யுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்று விட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் சுனில் குமார் நேற்று செய்தியாளர்க ளிடம் கூறுகையில், நிதி நிறு வன அதிபர் பரீத் மீது அம லாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட் டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

ஜனார்த்தன ரெட்டி, உதவி யாளர் அலிகான் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய காவல்துறையி னர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட் டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த் தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு சுனில்குமார் கூறினார்.

இதற்கிடையில், நிதி நிறு வன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங் கள் நேற்று வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner