எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக. 9- தென்னிலங்கை வேந்தன் "இராவணன் புகழ்பாடும் புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் நூல் குறித்த தொடர் சொற் பொழிவு & 7, 28.7.2018 அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில திராவிர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியை புதுச் சேரி பகுத்தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன் ஒருங்கிணைத்து உரையாற்றினார். வெல்லும்தூய தமிழ் ஆசிரியரும், புதுச்சேரி அரசின் சார்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவருமான எழுத்தாளர் முனைவர் க.தமிழ்மல்லன் அவர்கள் இராவண காவிய நூல் குறித்து பல்வேறு சுவை யான செய்திகளை எடுத்துக் காட்டி சிறப்பான ஆய்வுரையை ஆற்றினார். நிகழ்வில் புதுச்சேரி பகுத்த றிவாளர் கழக தலைவர் ஆடிட் டர் கு.இரஞ்சித்குமார், புதுச் சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு, பொதுக் குழு உறுப்பினர் விலாசினி இராசு, புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், புலவர் கி.கலிய பெருமாள், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட் டிணராசு, புதுச்சேரி அரசின் ஓய்வு பெற்ற சார்பு செயலர் சா.கிருஷ்ணசாமி, புதுச்சேரி மண்டல திராவிடர் கழக அமைப் பாளர் கே.குமார், இந்தியன் வங்கியின் மேனாள் மேலாளர் சி.எம்.பிள்ளை, பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, புதுச் சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், புதுச்சேரி நக ராட்சி கழக அமைப்பாளர் மு. குப்புசாமி, எழுத்தாளர் கவிஞர் பைரவி (எ) இரமேஷ், புதுச் சேரி அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவு மேனாள் துணை ஆய் வாளர் செ.ஆ.தேசிங்கு, புதுச் சேரி மண்டல கழக இளைஞ ரணி தலைவர் திராவிட இராசா, வெங்கட்டா நகர் பெ.மகா தேவன், சு.லோகநாதன், வீ. அருணகிரி, சி.குமார், மா. சேகர், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவ ராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner