எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தகவல் கேட்க முடியாது புதுதில்லி, ஆக. 8- தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரி வித்துள்ளது. மக்களவையில் புதனன்று கேள்வி ஒன் றுக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்திய குடிமக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்விண்ணப்பிக்க முடியும். வெளிநாடு வாழ்இந்தியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 - இன்படி இந்தியர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும். தகவல் அறியும்உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர் இணைய தளத்தில், எந்த அமைச்சகத்தின் கீழ் தகவல்களை பெற வேண்டுமே அதை தேர்வு செய்து, தகவல் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பங்களை பதிவு செய்வதற்குதெளிவான விளக்கங்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்ப கட்டணத்தையும் தகவல்அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தையும் விண்ணப்பதாரார்கள் பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

சிறைச் சாலைகளின் நிலைமையை ஆராய குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக. 9- நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் நிலைமையை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 1,382 சிறைச்சாலைகள் உள்ளன. இவற் றில், பெரும்பாலான சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் சித்திரவ தைகளை அனுபவித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன.

இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் மதன் பி.லோக்குர், எஸ். அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சிறைச் சாலைகளில் வசதிகளை ஏற்படுத்துவதற்காக, மத் திய அரசு அதிக நிதியை ஒதுக்கீடு செய்தபோதிலும், அதை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது.

மேலும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் நிலைமையை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில், மத்திய அரசின் அதிகாரிகள் மூவர் இடம் பெறுவார்கள். அந்தக் குழு, மகளிர் சிறைச்சாலை உள்பட அனைத்து சிறைச்சாலைகளுக்கும் சென்று கைதிகளின் நிலை மையை ஆய்வு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, நாட்டின் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப சில பிரச்சினைகளும் வருகின்றன' என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறினார். அதற்கு, இந்த விவகாரத்தில் மத்திய அரசை நாங்கள் குறைகூறவில்லை என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் 17-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது, சிறைச்சாலைகள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய உறுப்பினர்கள் குழுவைக் கூட நியமிக்காத சில மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மோசடிகள் எதிரொலி: வங்கிகளுக்கு 3 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி இழப்பு

புதுடில்லி, ஆக. 9- பல்வேறு மோசடிகளின் காரணமாக, வங்கிகளுக்கு கடந்த 3 நிதியாண்டுகளில் ரூ.70,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

மோசடிகளின் அதிகரிப்பால், கடந்த 3 நிதியாண்டுகளில் வங்கிகள் சுமார் ரூ.70,000 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. கடந்த 2015--16ஆம் நிதியாண்டில் ரூ.16,409 கோடி, 2016--17ஆம் நிதியாண்டில் ரூ.16,652 கோடி, 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.36,694 கோடி என்ற அளவில் வங்கிகளுக்கு இழப்பு ஏற் பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக கடன் அளிக்கும் நடை முறைகள், வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தல், ஊழல் உள்ளிட்டவையே இந்த நிலைக்கு காரணமாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள தகவலின்படி, ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 139 ஆகும். கடந்த 2017, மார்ச் 31 நிலவரப்படி, சுமார் ரூ.1,97,769 கோடிக்கு வாராக்கடன் வைத்துள்ள 12 கடன் மோசடியாளர்களுக்கு எதிராக திவால் சட்டத்தின்கீழ் நடவடிக்கையை தொடங்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவும், அவரைத் தொடர்ந்து நீரவ் மோடி உள்ளிட்ட சில தொழி லதிபர்களும், இந்தியாவில் கடன் மோசடியில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி வர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், கடன் மோசடியாளர்கள் வெளிநாடு தப்புவதை தடுக்கவும், அவர்களது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய வழிவகுக்கும். தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அண்மையில் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner