எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்கலையில் உயர்ஜாதி ஆணவம்!

லக்னோ,ஜூலை12உத்தரப்பிரதேசமாநி லத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையி லான பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது.மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அரசு களால் இந்துத்துவ வன்முறை வெறி யாட்டங்கள்அதிகரித்துவருகின்றன.இந் துத்துவ வன்முறை, ஜாதி, வகுப்புவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறுவது டன், இந்துத்துவ வன்முறையாளர்களுக்கு பக்கபலமாகவும் ஆட்சியாளர்கள் இருந்து வருகின்ற அவலம் தொடர்ந்து கொண் டிருக்கிறது.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மை மக்கள், பெண்கள்மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் கட்டுக் கடங்காமல் நடந்துவருகின்றன. பசுவதை என்கிற பெயரால் தாக்குதல்கள், கொலைகள் நடக்கின்றன.

பெண்கள்மீதான பாலியல் வன்முறை கள், கொலைகளில் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸின் வன்முறை வெறியாட்டம்

ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பின் பெயரால்பல்கலைக்கழகங்கள்,கல்லூரி களில் இந்துத்துவ வன்முறை வெறியாட் டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின் றன.

இந்நிலையில் தற்பொழுது அம்பேத்கர் பல்கலைக்கழகத்ல் பணியாற்றிவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பேராசி ரியரை மாணவரே தாக்கிய அவலம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் அமைந்துள்ள பாபா சாகெப் டாக்டர் பீமா ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றிவருபவர் பேராசிரியர் எல்.சி. மல்லய்யா. இவர் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்தவர்.

அவரிடம் ஆய்வு மாணவர்களில் ஒரு வராக சஞ்சய் உபாத்யாயா என்பவர் பயின்று வந்தார். சஞ்சய் உபாத்யாயா தன்னுடைய ஆய்வு அறிக்கையை பேராசிரியர் மல்லய் யாவிடம் அளித்திருந்தார். ஆனால், அதை பேராசிரியர் ஏற்காமல், அவரை பின்னர் வருமாறு கூறினார்.

தாழ்த்தப்பட்ட சமூக பேராசிரியர்மீது தாக்குதல்

அப்போது ஆத்திரமடைந்த மாணவர் சஞ்சய் உபாத்யாயா பேராசிரியர் மல்லய் யாவைநோக்கி ஜாதி இழிபடுத்தி திட்டிய வாறு கையை ஓங்கி குத்து விட்டார். சரமாரியாகத் தாக்கப்பட்ட பேராசிரியர் காப்பாற்றுமாறு சத்தமாக கதறினார். சத்தம் கேட்டு மற்ற பேராசிரியர்கள் அவரை அம்மாணவரிடமிருந்து காப்பாற்றினார்கள். மாணவர் தாக்கியது குறித்து பேராசிரியர் எல்.சி.மல்லய்யா பல்கலைக்கழக நிர்வாகத் திடம் புகாரளித்தார். அதனையடுத்து காவல்துறையில் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து,  லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர் கனிநிதி நைத்தானி  மற்றும் ஆஷியானா காவல் துறையினர் பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவர் சஞ்சய் உபாத்யாயாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதனிடையே மாணவர், ஆசிரியர்களிடையே பிளவு, ஜாதிவாரியான பிளவுகள் வெளிப்பட்டன. காவல்துறையினர் பல் கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

சஞ்சய்உபாத்யாயாவின்ஆய்வறிக் கையை பல்கலைக்கழக குழு அங்கீகரிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், ஜாதி ஆணவத்துடன் பேராசிரியர் எல்.சி.மல்லய்யாவை அம்மாணவர் திட்ட மிட்டு தாக்கியுள்ளார்.

பாஜக அரசின் அணுகுமுறைகளால், தாழ்த்ப்பட்டவர்களுக்கு எதிரான ஜாதி வெறி ஆணவங்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்மீதும் பாய்ந்துள்ள அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner